மதுரை பெண் தமிழகத்தில் முதலிடம் பெற்றார்
சென்னை:
தமிழிலேயே தேர்வு எழுதியவர் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.)அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள்.
மதுரையைச் சேர்ந்த ஸ்ரீபிரியா தமிழக மாணவர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 72வது இடம் அவருக்குக்கிடைத்துள்ளது.
அகில இந்திய அளவில் மொத்தம் 284 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் டெல்லியைச்சேர்ந்தவர்களே அதிக அளவில் தேர்வு பெற்றுள்ளனர்.
இரண்டாவது இடத்தை உத்தரபிரதேசம் பெற்றுள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் அரசு பயிற்சிமையத்தில் பயிற்சி பெற்ற 2 பெண்கள் உள்பட 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த 17 பேரில் 4 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், 4 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும் தேர்வு பெற்றுள்ளனர்.மீதமுள்ளவர்கள் ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ். மற்றும் பிற பதவிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்திலிருந்து மொத்தம் 46 பேர் இன்டர்வியூவுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிலிருந்து 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் மதுரையைச் சேர்ந்த 30 வயதான ஸ்ரீபிரியா ரங்கராஜன், தமிழக மாணவர்களிலேயே முதல் மாணவியாகத் தேர்வுபெற்றுள்ளார். அகில இந்திய அளவில் அவர் 72வது ரேங்க் பெற்றுள்ளார்.
ஸ்ரீபிரியாவின் தந்தை ரங்கராஜன் மற்றும் தாய் சபீதா ஆகிய இருவருமே டாக்டர்கள். ஸ்ரீபிரியாவுக்கு 2 சகோதரிகளும் ஒருஅண்ணனும் உள்ளனர். இவர்தான் வீட்டில் கடைக் குட்டியாவார்.
முதுநிலை சட்டம் (எம்.எல்.) படித்துள்ள ஸ்ரீபிரியாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவருடைய கணவர் லஜபதிராய் வழக்கறிஞராகஉள்ளார். இவர்களுக்கு அகிலன், கயல் ஆகிய 2 குழந்தைகளும் உண்டு.
ஐ.ஏ.எஸ். தேர்வில் விருப்பப்பாடமாக தமிழ் இலக்கியம் மற்றும் சட்டத்தை அவர் தேர்வு செய்திருந்தார்.
தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல்: நாகராஜன், ஸ்வரூப், ஜெயராகவன், பாலகிருஷ்ணன், முரளி, செந்தில்குமார், சுதாகர், மாணிக்கராஜ், வசந்தகுமார், சதீஷ்குமார், கருப்பண்ணசாமி, காளிராஜ் மகேஷ்குமார், ராஜலிங்கம்பாசு, ஜெயசீலன்,சிவசங்கரன் மற்றும் வந்தனா.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications