பாகிஸ்தானுக்கு மீண்டும் தூதரை நியமிக்க இந்தியா முடிவு
டெல்லி:
பாகிஸ்தானுக்கு மீண்டும் தூதரை நியமிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதே போல மீண்டும் இரு நாடுகளுக்கும்இடையே விமான போக்குவரத்தையும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் இதனைபிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
கடந்தம ாதம் 28ம் தேதி தன்னுடன் பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜபருல்லா கான் ஜமாலி தொலைபேசியில்பேசியபோது இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பது என இருவருமே முடிவு செய்ததாகவாஜ்பாய் தெரிவித்தார்.
இதன்படி முதலில் பாகிஸ்தானுக்கு மீண்டும் தூதரை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் அதே போலஇந்தியாவுக்கும் பாகிஸ்தான் விரைவில் தூதரை நியமிக்கும் எனவும் வாஜ்பாய் அறிவித்தார்.
மேலும் வாஜ்பாய் கூறுகையில், இரு நாட்டுப் பிரச்சனைகளையும் பேசித் தீர்க்க வேண்டும் என்பதையும்தீவிரவாதத்தை வைத்து இந்தியாவைப் பணிய வைக்க முடியாது என்பதையும் பாகிஸ்தான் பிரதமரிடம்தெரிவித்தேன்.
முதலில் இரு நாடுகளும் பொருளாதாரரீதியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொன்னேன். இரு நாட்டுமக்களிடையே ஆண்டாண்டுகாலமாக நிலவி வரும் கலாச்சார உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும்சொன்னேன். அதை பாகிஸ்தான் பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
அதே போல இரு நாட்டு விளையாட்டு உறவுகளையும், குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட்போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் ஜமாலி கேட்டுக் கொண்டார். அதை நான் ஏற்றுக்கொண்டேன்.
என்னை பாகிஸ்தானுக்கு வருமாறு ஜமாலி அழைத்தார். ஆனால், அதை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டேன்.அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளேன்.
3வது முறையாக பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த நான் முயற்சி எடுத்துள்ளேன். இது தான் என் கடைசி முயற்சியாகஇருக்கும். பாகிஸ்தானுக்கு காஷ்மீரின் ஒரு அடி நிலம் கூட விட்டுத் தரப்பட மாட்டாது. அதே நேரத்தில் இந்தப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு இந்த முறையாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் வாஜ்பாய்.
காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது தாக்குதல் நடந்ததையடுத்து அந் நாட்டுக்கான ரயில் சேவையையும் விமானசேவையையும் இந்தியா ரத்து செய்தது.
அதே போல இந்திய நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தியதையடுத்து அந்நாட்டுக்கான தூதரை இந்தியா வாபஸ் பெற்றது. இந்தியாவின் மீது பாகிஸ்தான் விமானங்கள் பறக்கவும் தடைவிதித்தது.
இப்போது அமெரிக்க நெருக்குதல் காரணமாக இரு நாடுகளும் பேச்சு நடத்த வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன. பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என்ற இந்தியாவின் நிலையை ஏற்க அமெரிக்காமறுத்துவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியாவை ஆதரித்தற்காக தனது தூதர் ரிச்சர்ட் பிளாக்வில்லை அமெரிக்காதிரும்ப அழைத்துள்ளது.
ஈராக் பிரச்சனையையடுத்து பாகிஸ்தான் ஆதரவு அதிகாரிகள் கையில் அமெரிக்க வெளியுறவுத்துறைசிக்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவின் உத்தரவுகளுக்குக் ஆட வேண்டிய நிலைக்குஇந்தியா தள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உயர் மட்டக் கூட்டம்:
இந் நிலையில் இந்தியாவுடனான உறவு குறித்து விவாதிக்க உயர் மட்டக் கூட்டத்தை பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் இன்று கூட்டியுள்ளார். இதில் பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜமாலி, வெளியுறவுஅமைச்சர், வெளியுறவுச் செயலர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
அர்த்தமுள்ள பேச்சு வேண்டுமாம்...
இதற்கிடையே உருது தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள முஷாரப், இந்தியா அர்த்தமுள்ள பேச்சுநடத்தினால் மட்டுமே காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு நடத்த முன்வந்திருப்பதில் எந்த நாட்டின் நெருக்குதலும் காரணமல்ல.
எந்த நாடும் இதில் நெருக்குதல் தந்துவிட முடியாது. அதே நேரத்தில் சில யோசனைகளை சொல்ல முடியும்.
நாங்கள் பேச்சு நடத்த ஆரம்பத்தில் இருந்தே தயார் தான். இந்தியா தான் இப்போது இறங்கி வந்துள்ளது என்றார்.
காஷ்மீருக்கு புது ஆளுநர்:
இந் நிலையில் காஷ்மீரின் புதிய ஆளுநராக எஸ்.கே. சின்ஹா இன்று நியமிக்கப்பட்டார். முன்னாள் ராணுவகமாண்டரான இவர் தீவிரவாதிகளைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications