போராட்டம் தீவிரமாகும்: மருத்தவக் கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கை
சென்னை:
தமிழக அரசுடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு கிடைக்கவில்லைஎன்றால் தங்களுடைய போராட்டம் தீவிரமாகும் என்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள்எச்சரித்துள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க அனுமதிக்கக் கூடாது, அரசு மருத்துவமனைகளில்கட்டணம் சலுத்தும் பிரிவை துவங்கக் கூடாது, மருத்துவ மேல் படிப்புகளை அங்கீகரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவக் கல்லூரிமாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 10வது நாளை எட்டியுள்ளது.சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் தொடர்ந்து 4வது நாளாக இன்றும்உண்ணாவிரதம் இருந்தும் வருகின்றனர்.
மேலும் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளுக்குபோராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 3ம் தேதி (நாளை) பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மாணவர்களுக்கு தமிழகஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் பங்கேற்கப் போவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக இன்று நிருபர்களிடம் மாணவர்கள் கூறுகையில்,
பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு எங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை.இருந்தாலும் இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்வோம்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான தீர்வு எங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறோம். நல்லதீர்வு கிடைத்தால் நாளையே நாங்கள் வகுப்புகளுக்குச் செல்லவும் தயார்.
ஆனால் நாளைய பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு கிடைக்காவிட்டால் எங்கள் போராட்டம்மேலும் தீவிரமடையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் மாணவர்கள்.
காதுகளில் பூ, முகத்தில் கவசம்...
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பல்வேறு நூதனப் போராட்டங்களையும்நடத்தி வருகின்றனர்.
நேற்று மதுரை, திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தட்டுகளை ஏந்தியும், காதுகளில் பூக்களைவைத்துக் கொண்டும் போராட்டம் நடத்தினர். சேலம் மாணவர்களோ கண்களைக் கறுப்புத் துணியால்மூடிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் இன்று திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் முகத்தை கவசம் போன்றபேப்பர் முகமூடிகளால் மூடிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை, கோயம்புத்தூரிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications