தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரி பாண்டி சட்டசபையில் தீர்மானம்
பாண்டிச்சேரி:
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாண்டிச்சேரி சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக பாண்டிச்சேரி சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவர் ஜானகிராமன் ஒருதீர்மானத்தைக் கொண்டு வந்து பேசுகையில்,
தமிழ் மொழியை செம்மொழியாக மத்திய அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்குஉலகெங்கிலும் உள்ள தமிழர்களும், தமிழ் மொழியைக் கற்று உணர்ந்தவர்களும் வரவேற்புஅளித்துள்ளனர்.
பல கோடி மக்களால் பேசப்படும் நம் தமிழ் மொழி இலக்கிய வளம், இலக்கண வளம் மற்றும்தனித்து இயங்கும் தன்மை கொண்ட மொழியாகும்.
உயர் தத்துவங்களையும் மெய்யறிவையும் உலகிற்குத் தந்தது தமிழ் மொழியே.ஐம்பெருங்காப்பியங்கள், திருக்குறள், தொல்காப்பியம், நாலடியார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானஇலக்கிய நூல்களைக் கொண்டுள்ளது தமிழ் மொழி.
பாரசீகம், பார்சி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளை மத்திய அரசு செம்மொழியாகஅறிவித்துள்ளது. ஆனால் பல கோடி மக்கள் பேசும் தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுவருகிறது.
தமிழ் மொழியின் சிறப்பையும் அதன் தொன்மையையும் பல்வேறு இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வுசெய்து வரும் திமுக தலைவர் கருணாநிதி, தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்றுமத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாண்டிச்சேரி சட்டசபையிலும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஜானகிராமன்.
அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க., திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தஎம்.எல்.ஏக்களும் பேசினார்கள். அதன் பின்னர் முதல்வர் ரங்கசாமி பேசுகையில்,
எதிர்க் கட்சித் தலைவர் கூறியது நல்ல கருத்து. மிகவும் இனிமையான மொழி தமிழ். அனைவரும்விரும்பிப் படிக்கக் கூடிய மொழியாக இருப்பதாலேயே அதைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்கியுள்ளோம்.
எனவே தமிழை செம்மொழியாக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்றார் ரங்கசாமி.
இதையடுத்து அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழை செம்மொழியாக மத்திய அரசுஅறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் பாண்டிச்சேரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications