இந்தியாவில் தீவிர சார்ஸ் இல்லை: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
டெல்லி:
இந்தியாவில் யாருக்கும் தீவிரமான சார்ஸ் நோய் இல்லை என்று உலக சுகாதார அமைப்புஅறிவித்துள்ளது.
இந்தியாவில் 10க்கும் மேற்பட்டவர்கள் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடம்இந்த நோய்க்கான அறிகுறிகள் மிகவும் குறைவாகவே இருப்பதாலேயே உலக சுகாதார அமைப்புஇவ்வாறு கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று டெல்லியில்நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன் சுமார் 20 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும் இந்த அறிகுறிகள் மற்றும் பரிசோதனைகள் ஆகியவற்றை மட்டும் வைத்தேஅவர்களுக்கு சார்ஸ் நோய் தாக்கியுள்ளதாகக் கூறிவிட முடியாது. எனவே சார்ஸ் நோய் குறித்துமக்கள் பீதி அடைய வேண்டாம்.
மேலும் இந்த 20 பேரிடமும் சார்ஸ் நோய்க்கான அறிகுறிகள் எதிர்பார்த்ததை விட மிகவும்குறைவாகவே உள்ளன. எனவே இந்தியா சார்ஸ் நோய் இல்லாத நாடு என்றும் இதுவரை நம்நாட்டில் யாருக்கும் சார்ஸ் நோய் தாக்கவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்தும் இந்தியாவின் பெயர்இடம் பெறவில்லை. உலக சுகாதார அமைப்பின் இணையத் தளத்திலும் இந்தப் பட்டியலில் இருந்துஇந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றார் ஸ்வராஜ்.
மேகாலயாவில் சார்ஸ்?
மேகாலயாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைச் சந்திக்கச் சென்ற அவருடைய 2 உறவினர்கள்தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள அஸித்தவா புரக்கயஸ்தா என்பவருக்கு சமீபத்தில் சார்ஸ் நோய் இருப்பதுதெரிய வந்தது. இந்நிலையில் அவருடைய சகோதரர் அமித்தவா மற்றும் மைத்துனி கானன்ஆகியோர் அவரைச் சந்தித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கும் சார்ஸ் நோய் தொற்றிருக்கும்என்று கருதப்படுகிறது.
இதையடுத்து ஷில்லாங் திரும்பிய அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தனிமையில்வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ரத்தம் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications