சென்னையில் சார்ஸ் இல்லை: அரசு மருத்துவமனை மறுப்பு
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் 3 பேர் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன்சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் பொய் என்று அம்மருத்துவமனையின் டீன் டாக்டர்விஜயலட்சுமி மறுத்துள்ளார்.
நேற்று 3 பேர் கடும் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறலுடன் இம்மருத்துவமனையில்சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவர்களுக்கு சார்ஸ் நோய் இருக்கலாம்எனக் கருதி அவர்களுடைய ரத்தம், சிறுநீர், சளி போன்றவை சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும்கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தகவல்களை டாக்டர் விஜயலட்சுமி மறுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர்நிருபர்களிடம் கூறுகையில்,
அரசு பொது மருத்துவமனையில் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன் 3 பேர் சேர்க்கப்பட்டதாகவெளியான செய்திகள் பொய். அப்படி யாரும் இங்கு சேர்க்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள்பீதி அடையத் தேவையில்லை.
இருந்தாலும் சார்ஸ் அறிகுறிகளுடன் நோயாளிகள் யாரும் வந்தால் அவர்களுக்காக 5 படுக்கைகள்கொண்ட தனி வார்டு தயாராக உள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் தனி மருத்துவர்கள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
சார்ஸ் நோயாளிகள் வந்தால் எந்த நிமிடமும் சிகிச்சை அளிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளோம்என்றார் டாக்டர் விஜயலட்சுமி.
பீதியின்றி உலவும் "ஏழுமலை" கிராமத்தினர்:
இதற்கிடையே சார்ஸ் நோய் உறுதியாகியுள்ள சிங்கப்பூர் டிரைவர் ஏழுமலையின் சொந்த ஊரைச்சேர்ந்த மக்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் உள்ளனர்.
சிங்கப்பூரில் டிரைவராக வேலைபார்த்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் சின்ன புஷ்பகிரிகிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கு சார்ஸ் வைரஸ் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்தது.
தற்போது அவர் குணமாகி விட்டதாகக் கூறப்பட்டாலும், இன்னும் சில நாட்களுக்கு அவர்தனிமையில் வைத்திருக்கப்படுவார் என்று வேலூர் சி.எம்.சி. மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில்சின்ன புஷ்பகிரி கிராமத்தில் சார்ஸ் பரவி இருக்குமோ என்ற பயம் முதலில் இருந்தது.ஆனால் இப்போது சுத்தமாகப் பயம் போய் விட்டது.
இதற்கு கிராமத்து மக்கள் காரணம் கூறும்போது, இயற்கையாகவே இந்த ஊரில் நோய்கள்அவ்வளவு சீக்கிரம் அண்டாது.
மிகப் பெரிய மலைகள் சுற்றிலும் சூழ்ந்து நிற்க, அந்த மலைகளில் உள்ள மூலிகைச் செடிகள், எந்தநோயையும் தடுக்கும் சக்தி கொண்டவை. எனவே சார்ஸைத்
தடுக்கும் சக்தி இந்த மூலிகைச் செடிகளுக்கு உண்டு.
ஏழுமலை இங்கு வந்தாலும்கூட அவர் மூலம் நிச்சயம் சார்ஸ் பரவாது என்று அபரிமிதமானநம்பிக்கையுடன் அம்மக்கள் கூறியுள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications