வாஜ்பாய்க்கு ஜமாலி கடிதம்: பாகிஸ்தான் வர அழைப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானுக்கு வருமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு அந் நாட்டுப் பிரதமர் மிர் ஜபருல்லா கான் ஜமாலி இன்றுநேரடியாக அழைப்பு விடுத்தார்.

அவரது அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக பொறுப்பு அதிகாரிராகவனிடம் வழங்கப்பட்டது.

இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதால் கடந்த 16 மாதங்ளுக்கு முன் இந்தியத் தூதரைபிரதமர் வாஜ்பாய் திரும்ப அழைத்தார். அதே போல பாகிஸ்தானும் தூதரை திரும்பப் பெற்றது.

மேலும் எல்லையில் படைகளைக் குவித்தது இந்தியா. பதிலுக்கு பாகிஸ்தானும் படையைக் குவிக்க எந்த நேரமும்போர் மூளும் சூழல் உருவானது. இதையடுத்து அமெரிக்கா தலையிட்டது. தீவிரவாதிகளைத் தடுக்க நடவடிக்கைஎடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியது.

பாகிஸ்தானும் தீவிரவாதிகளை ஒடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து இந்தியா தனது படையை எல்லையில் இருந்துவாபஸ் பெற்றது. இந் நிலையில் சமீபத்தில் காஷ்மீர் சென்ற வாஜ்பாய், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தத் தயார் என்றுஅறிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜமாலி தொலைபேசியில் வாஜ்பாயுடன் பேசினார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தானுக்கு தூதரை நியமிக்கவும், விமான போக்குவரத்தைத் தொடங்கவும்வாஜ்பாய் முன் வந்தார். இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

இதையடுத்து பாகிஸ்தானும் இந்தியாவுக்கு தூதரை நியமிப்பதாக அறிவித்துள்ளது. விமான சேவையைத்தொடங்கவும் முன் வந்துள்ளது.

இந் நிலையில் இன்று பிரதமர் வாஜ்பாயை பாகிஸ்தானுக்கு அழைக்கும் கடிததம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்துஇந்திய தூதரக பொறுப்பு அதிகாரி ராகவன் நிருபர்களிடம் கூறுகையில், என்னை பாகிஸ்தான் வெளியுறவுத்துறைஅலுவலகத்துக்கு அழைத்த அந் நாட்டு அரசு, வாஜ்பாய்க்கு அழைப்பு விடுக்கும் கடிதத்தை வழங்கியது என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன் வரவேற்பு:

முன்னதாக இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் தூதர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதற்கு அமெரிக்காவும்பிரிட்டனும் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தன.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறுகையில், முதலில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும்எனது மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாஜ்பாயின் இந்த நிச்சயம்பெரும் பலனளிக்கும் என்றார்.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்டாரா கூறுகையில், இந்தியப் பிரதமர் மிக நேர்மையானநடவடிக்கையை எடுத்துள்ளார். உலக அரசியல் விவகாரங்களில் தான் ஒரு இணையில்லா தலைவர் என்பதைவாஜ்பாய் நிரூபித்திருக்கிறார் என்றார்.

பாகிஸ்தானுக்கு ரஷ்யா அறிவுரை:

தெற்காசியாவில் அமைதியை ஏற்படுத்த பிரதமர் வாஜ்பாய் காட்டியுள்ள தாராள, விட்டுக் கொடுக்கும்மனப்பான்மையை தெளிவாகப் புரிந்து கொண்டு பாகிஸ்தான் செயல்பட வேண்டும் என ரஷ்யா கூறியுள்ளது.

இதே போல சீனா, பங்களாதேஷ் நாடுகளும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நட்பில் ஏற்பட்டுள்ள இந்தபுதிய திருப்பத்தை வரவேற்றுள்ளன.

பாவலுடன் ஜமாலி பேச்சு:

இந் நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் ஜமாலி, காலின் பாவலுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.இதன் பின்னர் தான் வாஜ்பாய்க்கு தனது கடித்தை ஜமாலி அனுப்பியுள்ளார்.

வாஜ்பாயின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் மாநாட்டுஅமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் பொருளாதார, வர்த்தக விவகாரங்கள் குறித்துப் பேசத் தயாராக இருப்பதாக பாகிஸ்தானியவெளியுறவுத்துறை அமைச்சர் கசூரி தெரிவித்துள்ளார்.

முஷாரப் முரண்டு:

ஆனால், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறுகையில் இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் தயார்.அதில் முக்கிய பிரச்சனை காஷ்மீர் தான். எனவே, அது குறித்துத் தான் முக்கியமாக பேசப்பட வேண்டும்.

தீவிரவாதத்தை ஒழிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்க நான் தயார். இந்தியாவுடன் எப்போதும் எங்கேயும்பேசத் தயார். இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறோம். ஆனால், காஷ்மீர் தான்முக்கியப் பிரச்சனை என்றார்.

பாகிஸ்தானிய பிரதமர் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டினாலும் அந் நாட்டு ராணுவமும், ராணுவத் தலைவரானமுஷாரபும் இந்தியாவுடன் நட்புறவுக்கு தயாராக இல்லை. இந்தியாவுடன் மோதல் தொடரும் வரை தான்பாகிஸ்தானை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது தான் இதற்குக் காரணம்.

முஷாரபுக்கு அல்-கொய்தா மிரட்டல்:

இந் நிலையில் பின் லேடனின் அல்-கொய்தா அமைப்பினால் முஷாரபின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகபாகிஸ்தானிய உளவுப் பிரிவுகள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அல்-கொய்தா தீவிரவாதிகளை அவர் அமெரிக்காவிடம் ஒப்படைத்து வருவதால் அவரைக் கொல்லஅல்-கொய்தா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+