குற்றால அருவிகளில் கொட்டுது நீர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் எதிர்பாராதவிதமாக திடீர் சீசன் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. குற்றாலம் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில்தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
வழக்கமாக ஜூன் மாத மத்தியில்தான் குற்றால சீசன் தொடங்கும். ஆனால் இந்த முறை திடீர் மழை பெய்ததால்முன் கூட்டியே தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல கடந்த இரு நாட்களாக அருவிகளில்தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டமும் குவியத் ஆரம்பித்துவிட்டது.
-->












Click it and Unblock the Notifications