குண்டர் சட்டத்தில் தவறாக கைதானவருக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு: அரசுக்கு உயர் நீதிமன்றம்உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தவறே செய்யாதவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து 4 மாதங்கள் சிறையில் அடைத்ததற்காக,அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவர் ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்வைத்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி இவரது ஒர்க்ஷாப்பிற்கு வந்தசெங்கல்பட்டு அண்ணா நகர் காவல் நிலைய மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர், தமீம்அன்சாரியைக் கைது செய்து அழைத்துச் சென்றார்.

அன்று இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார் அன்சாரி. பின்னர் அவரது தந்தைபத்ருதீனிடம் தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் உடனடியாக ரூ.1 லட்சம் தராவிட்டால் குண்டர்சட்டத்தின் கீழ் அன்சாரியை கைது செய்து விடுவேன் எனக் கூறியதாகத் தெரிகிறது.

போலீஸ் காவலில் இருந்தபோது அன்சாரி கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் 18ம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 35 லிட்டர் எரி சாராயத்தை வேனில்வைத்து கடத்தி வந்ததாக அன்சாரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையே தனது மகன் கைதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்பத்ருதீன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகம் கூறுகையில்,

அன்சாரி கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுவதைநம்புவதற்கில்லை. அதற்கான ஆதாரத்தையும் போலீஸார் சமர்ப்பிக்கவில்லை. அவர் எரி சாராயம்கடத்தினார் என்பது ஒரு கட்டுக்கதை போல தோன்றுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் சரியான முறையில் செயல்படவில்லை. குண்டர் சட்டப்பிரயோகம் தொடர்பாக, போலீஸார் கொடுத்த அறிக்கையை முழுதாகப் படிக்காமல் மேலோட்டமாகபார்த்து செயல்பட்டிருக்கிறார். இவ்விஷயத்தில் அவர் ஏனோ தானோ என்று செயல்பட்டுள்ளார்என்பதையே இது காட்டுகிறது.

மொத்தத்தில் தனி மனிதனின் சுதந்திரத்தில் ஆட்சியரும், காவல்துறையினரும்தலையிட்டிருக்கிறார்கள். மாநில அரசு அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் தமீம் அன்சாரி 4மாதம் தேவையே இல்லாமல் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

இதை வாபஸ் பெற முடியாது. எனவே அவருக்கு அரசு நஷ்ட ஈடு கொடுப்பதே சரியான தீர்வாகஇருக்க முடியும். எனவே தமீம் அன்சாரிக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றுநீதிபதி தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+