வேலூர் படுகொலைகள்: நகைக் கடை அதிபரின் தம்பி மீது போலீஸ் சந்தேகம்
வேலூர்:
வேலூரில் கடந்த மாதம் 18ம் தேதி நகைக் கடை அதிபர் சீனிவாசன் உள்பட 3 பேர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மெயின் பஜார் பகுதியில் நாகா ஜூவல்லரி என்ற நகைக் கடை உள்ளது. இங்கு ஏப்ரல் 18ம்தேதி இரவு ஒரு கும்பல் வந்தது. அங்கிருந்த சீனிவாசனை சுட்டுக் கொன்ற கும்பல் கடை ஊழியர்ஒருவரையும் சாலையில் சென்று கொண்டிருந்த ராமு என்ற ஆசிரியரையும் சுட்டுக் கொன்று விட்டுத்தப்பியது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து 6தனிப் படைகளை ஏற்படுத்தி விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின்போது திடீர்திருப்பமாக, கொல்லப்பட்ட சீனிவாசனின் தம்பி ரமேஷ் கண்ணா மீது போலீஸாரின் பார்வைதிரும்பியுள்ளது.
ரமேஷ் கண்ணாவே கூலிப்படையினரை வைத்து சீனிவாசனைக் கொன்றிருப்பார் என்று போலீஸார்சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து தனியிடத்தில் வைத்து ரமேஷ் கண்ணாவிடம் விசாரணை நிடந்துவருகிறது.
ரமேஷ் கண்ணாவின் வங்கி பெட்டகம்திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் இருந்த ரூ.18லட்சம் மதிப்புள்ள சேமிப்புப் பத்திரங்கள், நகைகளை போலீஸார் முடக்கியுள்ளனர். தொடர்ந்துரமேஷ் கண்ணாவிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


