2 லாரிகள் மோதி தீ பிடித்தன: டிரைவர் கருகி சாவு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பயங்கரமாகத் தீப்பிடித்துக்கொண்டது. இதில் ஒரு லாரியின் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 3 பேர்கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

ராஜஸ்தானில் இருந்த மாருதி கார்களை ஏற்றிக் கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி சேலம் நோக்கிவந்து கொண்டிருந்தது. எதிர்த் திசையில் சேலத்திலிருந்து தர்மபுரிக்கு மற்றொரு லாரி சென்றுகொண்டிருந்தது.

இன்று காலை 6 மணிக்கு இந்த இரு லாரிகளும் தீவப்பட்டியை அடுத்து உள்ள தொப்பூர் மேம்பாலம்அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்திலேயே இரு லாரிகளும்தீப்பிடித்துக் கொண்டன. டீசல் டாங்க் வெடித்ததாலேயே தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்விபத்தில் சேலத்திலிருந்து சென்ற லாரியின் டிரைவர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார்.அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அந்த லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது.

அதேபோல் கன்டெய்னர் லாரியும் இவ்விபத்தில் எரிந்து தீக்கிரையானது. அதில் இருந்த 7 புதியமாருதி கார்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. இதில் வந்து கொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்தடிரைவர் பாலவாலா, ரவி உள்பட 3 பேர் கடுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மூவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைஅணைத்தனர். இவ்விபத்து காரணமாக சேலம்-பெங்களூர் சாலையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தீப்பெட்டிகள் எரிந்து சாம்பல்:

இதற்கிடையே தீப்பெட்டி ஏற்றிச் சென்ற ஒரு லாரி, கிருஷ்ணகிரி அருகே தீப்பிடித்துக் கொண்டதில்அதிலிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலாயின.

சிவகாசியிலிருந்து லாரி மூலம் டெல்லிக்கு தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பப்பட்டன. கிருஷ்ணகிரிஅருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று இந்த லாரி தீப்பிடித்துக் கொண்டது.

உடனடியாக டிரைவரும், கிளீனரும் லாரியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த காவல்நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்ப வண்டிகள் விரைந்து வந்தன. ஆனால்அதற்குள் தீப்பெட்டி பண்டல்களும், லாரியும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. சுமார் 30 அடிஉயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது.

சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+