முதல் வகுப்பிலேயே ஆங்கிலப் பாடமா?- பள்ளி ஆசியர்கள் கடும் எதிர்ப்பு
சென்னை:
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலாவது வகுப்பிலேயே ஆங்கிலத்தை அறிகப்படுத்துவதற்குதமிழ்நாடு ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,2003-04ம் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலப் பாடத்தை அறிமுகப்படுத்த அரசுமுடிவு செய்துள்ளது.
ஆனால் இது குழந்தைகளுக்கு எந்தவித பலனையும் தராது. 10 வயது வரையில் குழந்தைகள்தங்களது தாய் மொழியில்தான் படிக்க வேண்டும். அப்போதுதான் அவற்றின் தாய் மொழி அறிவுவளர்ச்சியடையும்.
இதை மகாத்மா காந்தி, தாகூர் போன்றவர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். எனவே அதைப்பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும்.
பிற மாநிலங்களில் கூட 5ம் வகுப்பில்தான் ஆங்கிலப் பாடம் அறிகப்படுத்தப்படுகிறது. எனவேஒன்றாம் வகுப்பிலேயே ஆங்கில பாடத்தை அறிமுகப்படுத்துவது என்ற முடிவை அரசு கைவிடவேண்டும்.
மேலும் தற்போது அமலில் உள்ள 3ம் வகுப்பிலிருந்து ஆங்கிலப் பாடம் கற்றுத் தரும் முறையேதொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications