மீன் பிடிக்க தடை எதிரொலி: மீனவ பெண் பட்டினியால் சாவு

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்:

கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச்சேர்ந்த ஒரு மீனவப் பெண் பட்டினி கிடந்தே பரிதாபமாக இறந்தார்.

கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் 45 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்கக் கூடாது என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதனால் மீனவர்கள் வருமானம் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மீன் பிடி தொழில்பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்கும் என்று அவர்கள்எதிர்பார்த்தனர். ஆனால் நிவாரணத் தொகையும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நாகப்பட்டினம் ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த குமார் என்ற மீனவரின் குடும்பமேகடந்த ஒரு வாரமாகப் பட்டினி கிடந்து வருகிறது.

பிழைப்புக்கு வழியில்லாமல், வெளியே யாரிடமும் சென்று உதவியும் கேட்க முடியாமல்வீட்டுக்குள்ளேயே அவர்கள் பட்டினியோடு முடங்கிக் கிடந்துள்ளனர்.

இதையடுத்து குமாரின் மாமியாரான மல்லிகாவின் உடல் நிலை மிகவும் மோசமானது. 60 வயதானஇவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்தனர்.

ஆனால் அதற்கு முன்பாகவே மல்லிகா பரிதாபமாக இறந்தார். இந்த விஷயம் காட்டுத் தீ போலப்பரவியது. இதையடுத்து கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசுக்கும், மீன் வளத் துறை அதிகாரிகளுக்கும் தகவல்அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு உரிய நிவாரணத் தொகையும், அரிசியும் வழங்க வேண்டும்என்று அரசிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாண்டிச்சேரி பகுதி மீனவர்களுக்கு அம்மாநில அரசு குடும்பத்திற்கு 90 கிலோ அரிசியும், ரூ.300ம்நிவாரணமாக வழங்கியுள்ளதைச் சுட்டிக் காட்டும் தமிழக மீனவர்கள், தங்களுக்கும் அதேபோல்நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+