"குடிமகள்" விவகாரம்: ஜெயாவின் தவறான தகவல்- கருணாநிதி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசியல் அமைப்புச் சட்டத்தில் "இந்தியக் குடிமகனாகிய நான்" என்ற வாசகம்தான் இடம்பெற்றுள்ளது என தவறான தகவலை அரசாணை மூலமே முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்அறிவித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த மாதம் 25ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா பேசுகையில், "குடிமகள்" என்ற சொல்லைப்பயன்படுத்துவதற்காகப் புதிய அரசாணை கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பதவியேற்கும்போது "இந்தியக் குடிமகனாகிய நான்"என்று கூறித்தான் பதவியேற்க வேண்டியுள்ளது என்றும், பெண் முதல்வர்களோ, பெண்அமைச்சர்களோ இவ்வாறு கூறிப் பதவியேற்பதில் சிரமங்கள் உள்ளது என்றும் ஜெயலலிதாகூறினார்.

அதனாலேயே "குடிமகள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான புதிய அரசாணையைக்கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எந்த ஒரு இயக்கமும் நடத்தாமல் மூன்றே நாட்களில் அரசாணையை வெளியிட்டுபுதிய சரித்திரம் படைத்து விட்டதாகத் தனக்குத் தானே ஜெயலலிதா பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் "குடிமகனாகிய நான்" என்ற வாசகம் எங்குமே இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை.

அப்படி இருக்கும்போது "அரசியல் அமைப்பு சட்டத்தில் பெண்களுக்கு அநீதிஇழைக்கப்பட்டுள்ளது" என்று ஜெயலலிதா பேசியுள்ளது மிகவும் தவறானதாகும். இதைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா தனக்குள்ளேயே கற்பனை செய்து கொண்டு "நிழலோடு போராட்டம்" என்பதைப்போல "குடிமகள்" போராட்டம் நடத்துவதாகக் குதிப்பது ஏன்?

அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்றை இருந்ததாகக் கூறிக் கொண்டு சட்டசபையில் தவறானதகவலை அளித்து திசை திருப்பியதற்காக அவர் மீது உரிமைப் பிரச்சனையைக் கூட யாராவதுகொண்டு வரலாம்.

அதற்குள் ஜெயலலிதா தன் தவறைத் திருத்திக் கொள்வது நல்லது என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் கருணாநிதி.

இதற்கிடையே கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கும்போது"இந்தியக் குடிமகனாகிய நான்" என்ற வாசகத்தைப் பயன்படுத்தவே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் கடந்த வாரம் சட்டசபையில் பேசியபோது, ""கடந்த முறை நான் பதவி ஏற்கும்போது கூட"இந்தியக் குடிமகனாகிய நான்" என்று கூறித்தான் பதவி ஏற்க நேர்ந்தது"" என்று ஜெயலலிதாகூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+