பட்டப் பகலில் அம்மன் கோவில் பஞ்சலோக சிலை "அபேஸ்"
சென்னை:
சென்னையில் பட்டப் பகலில் கோவிலில் இருந்த பஞ்சலோகத்தினால் ஆன அம்மன் சிலையை சிலர்திருடிச் சென்று விட்டனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஆர்.வி. நகரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் பஞ்சலோகத்தால் ஆன அங்காளம்மனின் ஐம்பொன் சிலை வைக்கப்பட்டிருந்தது.
சுமார் 30 கிலோ எடை கொண்டது இந்த சிலை நேற்று பட்டப் பகலில் திருடு போயுள்ளது.கோவிலைச் சுற்றி வந்து கண்காணித்த ஊழியர்கள் திடீரென்று அந்தச் சிலை காணாமல் போனதைக்கண்டு அதிர்ந்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த காலை நேரத்தில் சுமார் 10.30 மணிக்கு இந்தப் பஞ்சலோகசிலையை யாரோ சிலர் திருடிச் சென்று விட்டனர்.
இந்தச் சிலையின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. தகவல் அறிந்ததும் விரைந்துவந்த குமரன் நகர் போலீசார் சிலை திருட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அம்மன் சிலையைத் திருடிய கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக 2 தனிப் போலீஸ் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள கோவிலில் பஞ்சலோக அம்மன் சிலைதிருடப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ஜினியரைத் தாக்கி கொள்ளை:
இதற்கிடையே திண்டுக்கல்லில் என்ஜினியர் ஒருவரைத் தாக்கி நகை, பணத்தை சிலர் திருடிக்கொண்டு ஓடி விட்டனர்.
திண்டுக்கல் விவேகானந்தபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற என்ஜினியர் வீட்டில் தனியாகஇருந்தார். அவருடைய குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டு ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு 2 பேர் உள்ளேநுழைந்துள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த ரவிச்சந்திரனை எழுப்பி அவரை சராமாரியாகத் தாக்கஆரம்பித்தனர்.
பின்னர் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து 90 பவுன் தங்க நகைகள், ஒரு வைர நெக்லஸ் மற்றும்ரூ.60,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக ரவிச்சந்திரன் போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்திகொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications