கிரிக்கெட் தகராறு: எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து வாலிபர் கொலை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள ஓய்யாலி குப்பம் என்ற மீனவர் கிராமத்தில்,கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் மின்சார ஷாக் கொடுத்துகொல்லப்பட்டார்.
ஒய்யாலி குப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் ராமு,மாதவன், ஏழுமலை, சீனிவாசன் ஆகிய சகோதரர்கள். இவர்கள் அனைவரும் நண்பர்கள்.
அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடினர். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் சுரேஷ் காயமடைந்தார். இதன் பின்னர் புதுப்பட்டணத்திற்கு வந்தார் சுரேஷ். அங்கு மதுஅருந்தினார்.
அதன் பிறகு அவரைக் காணவில்லை, வீட்டுக்கும் திரும்பவில்லை. இதனால் குழம்பிய சுரேஷின்குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடினர். இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள காமராஜர் சிலைஅருகே கை, கால்களில் தீக்காயத்துடன் சுரேஷ் கிடந்தார். மூளை குழம்பிய நிலையில் அவர்காணப்பட்டார்.
உடனடியாக அவரை செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது மாதவன் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்துசுரேஷுக்கு மின்சார ஷாக் கொடுத்தது தெரியவந்தது. இதன் விளைவாகத்தான் மூளை குழம்பி,பின்னர் இறந்துள்ளார் சுரேஷ்.
இதையடுத்து 4 சகோதரர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications