மாணவர் போராட்டத்தை அடக்கும் அரசு: மருத்துவக் கல்லூரி விடுதிகள் மூடல், மெஸ்களும் அடைப்பு
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து அதை அடக்கும் முயற்சிகளில்தமிழக அரசு இறங்கியுள்ளது.
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் விடுதிகளையும் மெஸ்களையும் மூடஉத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விடுதிகள் மூடப்பட்டுவிட்டன.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதை எதிர்த்தும், தங்களது பல பாடத் திட்டங்களுக்கு அரசு இன்னும்அங்கீரம் தராமல் இருப்பதைக் கண்டித்தும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஹவுஸ் சர்ஜன்கள் எனப்படும் 5ம்ஆண்டு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை தர போதிய டாக்டர்கள் இல்லாமல் தடுமாறிவருகின்றன.
இதைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெறும் வெட்டிப் பேச்சு தான் பேசிவருகிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அரசு மருத்துவமனைகளில் காலை நேரங்களில் ஒரு டாக்டருக்கு சராசரியாக 400 நோயாளிகள்வரிசையில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் மாணவர்களுடன் நலத்துறை அமைச்சர் செம்மலைநடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியைடந்தது.
இந் நிலையில் மாணவர்களின் போராட்டத்தை அடக்குவதாக நினைத்துக் கொண்டு கல்லூரி விடுதிகளையும்மெஸ்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே ஸ்டைலைத் தான் ராணி மேரிக் கல்லூரிவிவகாரத்திலும் தமிழக அரசு கடைபிடித்து நீதிமன்றத்திடம் சூடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மாநிலம் முழுவதும் உள்ள 12 மருத்துவக் கல்லூரிகளின் விடுதிகளும் மூடப்பட்டுவிட்டன. மெஸ்களும்மூடப்பட்டுவிட்டன.
இருந்தாலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில்தங்கிய வண்ணம் தங்கள் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications