தமிழக சட்டசபையை கலக்கிய கன்னடம்
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பா.ம.கவினருக்கும் இடையே கன்னடத்தில்வாக்குவாதம் நடந்தது.
இன்று சட்டசபையில் பேசிய பா.ம.க. உறுப்பினர் கிருஷ்ணன் அருந்ததியர் சமுதாயத்துக்காக சில கோரிக்கைகளைவைத்தார். அப்போது திடீரென கன்னத்தில் பேசினார்.
உடனே அவரை நிறுத்திய சபாநாயகர் காளிமுத்து, நீங்கள் ஏதோ ஒரு பாஷையில் பேசுகிறீர்கள். அது உங்களகட்சித் தலைவர் ஜி.கே. மணிக்காவது புரியுமா என்று கேட்டார்.
உடனே எழுந்த ஜி.கே. மணியும் கன்னடத்திலேயே பேசினார். தான் பேசியது என்ன என்பதை தமிழிலும்விளக்கினார்.
இதைத் தொடர்ந்து எழுந்த முதல்வர் ஜெயலலிதாவும் கன்னடத்திலேயே கிருஷ்ணனுக்கு பதில் தந்தார். அப்போதுஜெயலலிதா கூறியதாவது: அருந்ததியர் இனத்தினருக்கு நல்வாழ்வு தர சில கோரிக்கைகளை முன் வைத்துகிருஷ்ணன் பேசினார். ஆனால், அவரது கன்னடம் புரியவில்லை. இப்போது ஜி.கே. மணி பேசிய கன்னடம்எனக்குப் புரிந்தது.
ஆனால், அதிகாரிகளுக்கும் புரிய வேண்டும். இதனால் நீங்கள் தமிழிலேயே பேசுவது தான் நல்லது என்றார்.
அப்போது இடைமறித்த காளிமுத்து, இப்போது தான் உண்மையான திராவிட நாடு சட்டசபை உருவாகியிருக்கிறதுஎன்றார். இதனால் அவையில் சிரிப்பொலி பரவியது.
இதையெல்லாம் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன்எழந்து, இங்கே திடீரென ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மொழிளில் பேசுகிறார்கள். எனவே எங்களுக்கு மொழிமாற்றுக் கருவிகள் வழங்கப்படுமா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த காளிமுத்து, இது சட்டசபை தான். இதை டெல்லி நாடாளுமன்றமாக மாற்ற நினைக்கிறீர்களாஎன்று கேட்டு அவரை உட்கார வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications