இலங்கை- புலிகள் பேச்சு நெடுங்காலம் நீடிக்கலாம்: நார்வே
கொழும்பு:
இலங்கை அரசு- விடுதலைப் புலிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் தொடரலாம் என நார்வேகூறியுள்ளது.
பேச்சுவார்த்தைகள் நல்லபடியாய் நடக்க மிகுந்த பொறுமை வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா சொன்னதுமிகச் சரியாகப் போய்விட்டது.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, பொறுமை மட்டும்இல்லாவிட்டால் எந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெறாது. பொறுமையில்லாவிட்டால் நீங்கள் நார்வேக்குபிளேன் ஏற வேண்டியது தான் என்றார். அது எவ்வளவு சரியானது என்று இப்போது புரிகிறது.
இப்போது புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்றநம்பிக்கை எனக்கு உண்டு. பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம். இறுதியில் நல்ல பலன் கிடைக்கவேண்டும் என்பது ஆசை.
நார்வே துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விடார் ஹெல்கெசென், ஜப்பானிய சிறப்பு அமைதித் தூதர் யுசுசிஅகாஸி, இலங்கை பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களான மிலிந்த மொரகொடா மற்றும் பெர்னார்ட் குணதிலகேஆகியோர் கடந்த வாரம் டெல்லி சென்று அந் நாட்டுத் தலைவர்களுடன் அமைதிப் பேச்சு குறித்துவிவாதித்துவிட்டுத் திரும்பினர்.
இந்த மூன்று நாட்டுக் குழுவினரும் தனித்தனியே தான் டெல்லி சென்றனர். ஆனால், எதிர்பாராத விதமான ஒரேநேரத்தில் இந்தியாவில் சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்குஇந்தியா முழு துணை நிற்கிறது என்றார்.
நார்வே, ஜப்பான், இலங்கை குழுவினர் திட்டமிட்டே ஒரே நேரத்தில் டெல்லி வந்து இந்திய வெளியுறவுத்துறைஅதிகாரிகளுடன் பேச்சு நடத்திவிட்டுத் திரும்பியுள்ளனர். இந்தச் சந்திப்புகளை இந்த 3 நாடுகளும் இந்தியாவும்மறைத்துவிட்டன.
இப்போது தான் சந்திப்பு நடந்த விவரமே வெளியில் வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications