மருத்துவக் கல்லூரி விடுதிகள் மூடல், மெஸ்களும் அடைப்பு- 1,200 மாணவர்கள் கைது
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து அதை அடக்கும் முயற்சிகளில்தமிழக அரசு இறங்கியுள்ளது. ஆனால், அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள் நேற்றும் இன்றும்நூற்றுக்கணக்ககில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
விடுதி மூடப்பட்டதால் வெளிறுேம் சென்னை மருத்துவ கல்லூரி மாணவிகள் |
இதையடுத்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சுமார் 350 பேர் கைதுசெய்யப்பட்டனர். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை திறந்த மைதானத்தில் உட்கார வைக்கப்பட்ட இவர்கள்பின்னர் அதிகாலையில் சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் மோகன்தாஸ் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பல மணி நேரம் எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்ட பின்னர் காலை 7 மணிக்கு இவர்களை நீதிபதி சொந்த ஜாமீனில்விடுவித்தார்.
இதில் ஒரு மாணவி மயங்கி விழ அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் இரவோடு இரவாக விடுதி மூடப்பட்டதால் மாணவர்களும் மாணவிகளும் நடு ரோட்டில் உட்கார்ந்தனர்.அங்கேயே தூங்கினர். பின்னர் போலீசார் ஓடி வந்து கெஞ்சி கலைந்து போகச் செய்தனர்.
விடுதிகள் மூடப்பட்டுவிட்டாலும் கூட இன்றும் மாநிலம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின்போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கிய வண்ணம் தங்கள்போராட்டத்தை மாணவர்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளனர். மேலும் லாட்ஜ்களில் ரூம் எடுத்துத் தங்கிதங்கள் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
கோவையில் இன்று காலை பயிற்சி டாக்டர்களும் மாணவர்களும் காலை முதல் திருச்சி ரோட்டில் உட்கார்ந்துஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 87மாணவிகள் உள்பட 160க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் பயிற்சிக் கல்லூரிமைதானத்தில் உச்சி வெயிலில் உட்கார வைத்தனர்.
இதற்கிடையே கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தொடர் உண்ணாவிரதம் இன்றும் தொடர்ந்து.
இதில் இன்று சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். சென்னையிலும் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மயங்கிவிழுந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக பல அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்குவந்தனர்.
இதே போல சேலம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் மாணவர்கள் கடும் வெயிலில்இன்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாயினர்.
தமிழகம் முழுவதும் இன்று 1,200 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 120 பேர் கைது:
நேற்று தங்களை நள்ளிரவில் கைது செய்து அதிகாலை வரை திறந்த வெளியில் உட்கார வைத்த போலீசார் குறித்துபுகார் செய்ய சென்னை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் டீன் விஜயலட்சுமியைச் சந்திக்கச் சென்றனர்.
ஆனால், அவர்களை மருத்துவமனைக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதையடுத்துமாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 120 மாணவர்களைபோலீசார் கைது செய்தனர்.
![]() |
விடுதி மூடலை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் |
| (படங்கள் நன்றி- தினகரன்) |
எனப்படும் 5ம் ஆண்டு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை தர போதிய டாக்டர்கள் இல்லாமல் தடுமாறிவருகின்றன. இதைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெறும் வெட்டிப் பேச்சு தான் பேசிவருகிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அரசு மருத்துவமனைகளில் காலை நேரங்களில் ஒரு டாக்டருக்கு சராசரியாக 400 நோயாளிகள்வரிசையில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் மாணவர்களுடன் நலத்துறை அமைச்சர் செம்மலைநடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியைடந்தது.
இந் நிலையில் மாணவர்களின் போராட்டத்தை அடக்குவதாக நினைத்துக் கொண்டு கல்லூரி விடுதிகளையும்மெஸ்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதே ஸ்டைலைத் தான் ராணி மேரிக் கல்லூரிவிவகாரத்திலும் தமிழக அரசு கடைபிடித்து நீதிமன்றத்திடம் சூடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications