தூத்துக்குடியில் ரூ. 4,000 கோடி செலவில் புதிய மின் நிலையம்: தமிழகம் அறிவிப்பு
சென்னை:
தூத்துக்குடியில் ரூ. 4,000 கோடி செலவில் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மின் நிலையம்அமைக்கப்பட உள்ளது.
இது தவிர நாகப்பட்டினம் அருகே குத்தாலத்தில் 101 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. எரிவாயுவைக் கொண்டு இங்கு மின்சாரம் தயாரிக்கப்படும்.
இத் திட்டத்துக்கு ரூ. 352 கோடி செலவிடப்படும் என மின்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
மின்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அவர் பேசியதாவது:
குத்தாலத்தில் எரிவாயுவில் இயங்கும் மின் நிலையத்தை தமிழக மின்வாரியமே அமைக்கும். தூத்துக்குடியில் 4,000கோடி செலவில் அமைக்கப்படும் மின் நிலையத்தை, நெய்வேலி நிலக்கரி சுரங்கமும் தமிழக மின்வாரியமும்இணைந்து அமைக்கவுள்ளன.
சென்னையின் மின் வினியோகக் கட்டமைப்பை நவீனமாக்கவும் மின் வினியோகத்தை சீராக்கவும் ரூ. 441 கோடிசெலவிடப்படும்.
சில மாதங்களில் தமிழகத்தின் மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டிவிடும். நாட்டில் எந்த மாநிலமும்இவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை. தமிழகம் தான் இச் சாதனையைப் புரிந்துள்ளது என்றார்.
அப்போது இடை மறித்த எதிர்க் கட்சிகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதை மீண்டும்வழங்க வேண்டும் என்று கோரினர். இதற்கு அமைச்சர் அளித்த பதில் திருப்தி தராததால் பா.ம.க, காங்கிரஸ்,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications