சார்ஸினால் இந்தியாவுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
துபாய்:
தாய்லாந்து, சிங்கப்பூர். மலேசியா, சீனாவில் சார்ஸ் நோய் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் இந்த நாடுகளுக்கானசுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் இந்தப் பயணிகள்இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8.5 சதவீதம்அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுற்றுலாத்துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் ரேஷ்மி வர்மா துபாயில்நிருபர்களிடம் தெரிவித்தார்.
துபாயில் நடந்து வரும் அரேபிய வர்த்தகக் கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க வந்த அவர்நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவில் சார்ஸ் நோய் பரவல் இல்லை. இதனால் சீனா உள்ளிட்ட கிழக்குநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அதைத் தவிர்த்துவிட்டு இந்தியா வரஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக சீனாவுக்குச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகளின் பல குழுவினர் இந்தியாவுக்கு வரஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவை சார்ஸ் தாக்குதல் இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதும் இதற்கு ஒரு முக்கியக்காரணமாகும். இதனால் இந்தியா வரத் திட்டமிட்டிருந்த ஐராாேப்பிய பயணிகள் தங்கள் பயணத்தை ரத்துசெய்யவில்லை.
சார்ஸ் நாடுகளில் இருந்து வருவோரை இந்தியா தடுக்கவில்லை. இந்த நாடுகளின் விமானங்களையும்தடுக்கவில்லை. ஆனால், தீவிரமான மருத்துவ சோதனைகள் நடத்திவிட்டுத் தான் அனுமதிக்கிறோம்.
இந்தியா- வளைகுடா நாடுகளுக்கு இடையிலான விமானக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இதற்கு மாநிலஅரசுகள் தான் காரணம். விமான பெட்ரோலின் மீது அவை மிக அதிக வரி விதிப்பதால் தான்கட்டணம் அதிகமாகஉள்ளது.
இது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய சுற்றுலாத்துறை பேச்சு நடத்தும். ஏற்கனவே, ஆந்திர மாநில அரசுவரியை 39ல் இருந்து 4 சதவீதமாகக் குறைத்துவிட்டது. ஆனால், கோவா உள்ளிட்ட பல மாநிலங்கள் வரியைமேலும் கூட்டிக் கொண்டு போகின்றன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications