வாஷிங்டனில் ஐ.எஸ்.ஐ. தலைவர்: இந்தியா- அமெரிக்கா ரகசிய ஆலோசனை
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் உயர் மட்ட அளவில் உடனடியாக பேச்சு தொடங்க வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் பிரதமர் மிர்ஜபருல்லா கான் ஜமாலி கூறியுள்ளார்.
பாகிஸ்தான டிவிக்கு அவர் அளித்த பேட்டியில்,
வரும் வாரங்களில் அதிகாரிகள் மட்டததில் பேச்சு தொடங்கும். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பேசுவர். அதன்பின்னர் தான் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு நடத்தப்படும். நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும்இந்தியாவுடன் பேச்சு நடத்த முழு ஆதரவு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருகிறது.
வாஜ்பாயை நான் பாகிஸ்தானுக்கு அழைத்தேன். அவரால் வர முடியாவிட்டால் நான் டெல்லி போகத் தயார்.அதையும் அவரிடம் கூறியிருக்கிறேன். ஆனால், இதில் அவசரப்படாமல் நிதானமான முடிவுகளை எடுக்கவேண்டும் என வாஜ்பாய் கூறியிருக்கிறார். அவர் சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன்.
இரு நாட்டு மக்கள் இடையில் பரஸ்பர அன்பு நிலவுகிறது. அதை இரு நாட்டுத் தலைவர்களும் உணர்ந்தேஉள்ளோம்.
இப்போது இரு நாடுகள் இடையே கடுமை குறைந்ததற்கு வாஜ்பாய் தான் காரணம். இதற்காக அவரைப்பாராட்டியே ஆக வேண்டும் என்றார் ஜமாலி.
அமெரிக்காவில் ஐ.எஸ்.ஐ. தலைவர்:
இந் நிலையில் பாகிஸ்தான் உளவுப் பிரிவுத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இஷானுல் ஹக் இப்போதுவாஷிங்டன் சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் முற்றும் போதெல்லாம் அமெரிக்காவின் சார்பில் தலையிட்டுஅமைதியை ஏற்படுத்தியவர் ஆர்மிடேஜ். அவர் நாளை பாகிஸ்தான் வர உள்ளார்.
பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்கள், அமைப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர் ஆர்மிடேஜ். கார்கில்விவகாரம், இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து எழுந்த பிரச்சனையின்போது இவர் தான்இந்தியா-பாகிஸ்தான் சென்று நிலைமையை சரி செய்தார்.
இப்போது இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் நிலையில் ஆர்மிடேஜின் பயணம் மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது. அதிபர் புஷ்ஷின் பாதுகாப்பு ஆலோசகர் கிரிஸ்டினா ரோக்காவும் பாகிஸ்தான்வருகிறார்.
இந் நிலையில் ஐ.எஸ்.ஐ. தலைவரை வாஷிங்டனுக்கு வரவழைத்து ஆர்மிடேஜ் பேசியதாகத் தெரிகிறது.
காஷ்மீரில் தீவிரவாதிகள், அவர்களைத் தடுக்க உளவுப் பிரிவு எடுத்துள்ள நடவடிக்கை, தீவிரவாதிகள்- உளவுப்பிரிவுக்கு இடையே நிலவி வரும் தொடர்பு ஆகியவை குறித்த முழு விவரத்தையும் ஹக்கிடம் அமெரிக்கஅதிகாரிகள் குடைந்து எடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரகசிய ஆலோசனை:
இவரிடம் திரப்பட்டும் முழு விவரங்களுடன் ஆர்மிடேஜ் இந்தியா- பாகிஸ்தான் வர உள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன் ஆர்மிடேஜ் லண்டன் சென்று அங்கு பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர்பிரஜேஷ் மிஸ்ராவை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந் நிலையில் காஷ்மீரில் தோடா, ரஜெளரி, பூன்ஜ் மாவட்டங்களில் நடந்த தனித்தனி ராணுவ வேட்டைகளில் 8தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 3 பேர் ஜமாயத்-ஏ-முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications