10 ஆண்டுகளை நிறைவு செய்தது மதிமுக: மாநிலம் முழுவதும் விழா
சென்னை:
மதிமுக தொடங்கப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும்பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதே நேரத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பதால் கட்சித்தொண்டர்களிடையே உற்சாகம் மிஸ்ஸிங்.
கட்சியின் 10வது ஆண்டு விழாவையொட்டி இன்று ஆயிரக்கணக்கான மதிமுகவினர் வைகோவைச் சந்திக்கவேலூர் சிறையில் குவிந்தனர்.
சென்னை எழும்பூரில் உள்ள அக் கட்சியின் தலைமையகமான அன்பகத்தில் மத்திய அமைச்சர் கண்ணப்பன்தலைமையில் விழா நடந்தது. கட்சிக் கொடியை ஏற்றி வைத்த கண்ணப்பன் பேசுகையில்,
கடந்த 10 ஆண்டுகளாக மதிமுக தொடர்ந்து வலுவான இயக்கமாக வளர்ந்து வந்துள்ளது. இந்தக் கட்சிவிரைவிலேயே அழிந்துவிடும் என்று கனவு கண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாக மதிமுக விளங்கி வருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்று சொல்லி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வைகோ கைதுசெய்யப்பட்டார். மதிமுகவை ஒழித்துவிடலாம் என நினைத்து வைகோவை சிறையில் அடைத்துள்ளார் ஜெயலலிதா.ஆனால், விரைவில் வைகோ வெளியில் வருவார். கோட்டையில் உட்கார்ந்து கொட்டமடிக்கும் ஜெயலலிதாவிரைவில் சிறை செல்வார். இது இயற்கையின் நியதி.
கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொண்டர்கள் கட்சியை வலுப்படுத்ததீவிரமாக உழைக்க வேண்டும்.
பொடா சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என்பது தான் மதிமுகவின் நிலை. இதை மற்ற கட்சிகளுடன்இணைந்து மதிமுக தொடர்ந்து வலியுறுத்தும்.
ராணி மேரிக் கல்லூரியை இடிக்க வேண்டாம் என்று பலர் சொல்லியும் ஜெயலலிதா கேட்கவில்லை. ஆனால்,டி.ஆர். பாலு ஒரு சட்டத்தைத் தேடிப் பிடித்து ஆணையை வெளியிட்டார். ராணி மேரிக் கல்லூரி தப்பியது.இப்போது அவர் மீதும் கடும் கோபம் கொண்டு ஜெயலலிதா திட்டித் தீர்த்து வருகிறார்.
ஜெயலலிதா என்ன குதித்தாலும் சரி. சட்டம் போட்டது போட்டது தான். அதை மாற்ற முடியாது. கல்லூரி அந்தஇடத்தில் தான் இருக்கும்.
விரைவில் திமுகவில் ஐக்கியம்:
இதற்கிடையே மதிமுக விரைவிலேயே திமுகவில் ஐக்கியமாகிவிடும் என்று கருதப்படுகிறது. மதிமுகவின்சொத்துக்களைத் தனிப்படுத்தி அதை வைகோ தனது தந்தையார் வையாபுரி பெயரில் உருவாக்கியுள்ளஅறக்கட்டளையின் பேரில் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த சொத்து மாற்றம் விரைவிலேயே நடந்தேறும். இதன் பின்னர் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இணைப்புநடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலினை திமுகவின் அடுத்த தலைவராக கருணாநிதி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவேஅறிவிப்பார் என்று தெரிகிறது. அதையொட்டி இணைப்புப் படலமும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications