தொலைபேசி கட்டண உயர்வு: நாடாளுமன்றத்தில் அமளி
டெல்லி:
நாடு முழுவதும் தொலை பேசிக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து திமுக, சமதா, சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய மத்திய அரசுக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் மக்களவையில்பெரும் அமளியை ஏற்படுத்தின.
சில பா.ஜ.க. எம்.பிக்களும் கூட மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
சமீபத்தில் செல்போன் கட்டணங்களைக் குறைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி தந்த மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனம்தனது கட்டணத்தை மட்டும் உயர்த்தியது. அதோடு டாக் டைமை 3 நிமிடத்தில் இருந்து 2 நிமிடமாகக் குறைத்தது.
பிரீ கால்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைத்தது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.செல்போன் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் மத்திய பா.ஜ.க. தலைகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு நாமம் போட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சனை இன்று மக்களவையில் வெடித்தது. அப்போது பா.ஜ.க. எம்.பிக்கள் சிலரே இந்தக் கட்டண உயர்வை எதிர்த்தனர். அடுத்ததேர்தலில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் போவது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதே போல மத்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம், சமதா கட்சி ஆகியவையும் இந்தக் கட்டணஉயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கோரின. குறிப்பாக சிவசேனை எம்.பிக்கள் இதில் பெரிய ஊழலே நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினர்.
தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு உதவும் அடிப்படை தொலைபேசிக் கட்டணத்தைஉயர்த்தியுள்ளது பா.ஜ.க. என அவர்கள் குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இந்த கட்டண உயர்வை எதிர்த்து சபாநாயகரைச் சூழ்ந்து நின்றுகோஷமிட்டனர். அப்போது பேசிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரி,
தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்கா பி.எஸ்.என்.எல்க்கு முழுச் சுதந்திரம் தரப்பட்டுள்ளது. அவர்கள் தொழில்ரீதியில் தான்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேற முயன்றார்.
ஆனால், அவரை வெளியேற விடாமல் எம்.பிக்கள் தடுத்ததால் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
அப்போது பேசிய பி.எஸ்.பி. எம்.பிக்கள், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஜி.எஸ்.எம். மற்றும் டபுள்யு. எல்.எல். நெட்வோர்க்நடத்த லைசென்ஸ் தந்துள்ளது. உலகிலேயே எந்த நாட்டிலும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு இவ்வாறு இருவேறுதொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் தொலைபேசிச் சேவை நடத்த அனுமதி தரப்பட்டது இல்லை என்றனர்.
திமுக எம்.பியான பழனிமாணிக்கம் பேசுகையில், இந்தக் கட்டண உயர்வால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் சொல்லி மாளாதுஎன்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications