கற்பழிப்பால் பூமி வந்த சிசு
சேலம்:
கற்பழிப்பில் பிறந்த பெண் சிசு அரசுத் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பெரியேரிப்பட்டியைச் சேர்ந்தவர் பொற்கொடி. 16 வயதே ஆன இந்தக் கூலிப் பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த மேல்ஜாதி ரெளடிகளான மணிகண்டன், லட்சுமணன் ஆகியோர் அடிக்கடி மிரட்டிக் கற்பழித்துள்ளனர்.
இந்த விவரம் தெரிந்தும் கூட கிராமப் பெரிசுகள் அதை கண்டுகொள்ளவில்லை. மேல் ஜாதியினரின் வயல்களில் வேலை பார்த்துவயிற்றைக் கழுவி வரும் கூலித் தொழிலாளிகளான பொற்கொடியின் பெற்றோராலும் இதை எதிர்த்துப் போராட முடியவில்லை. இந்தஜாதியினரை எதிர்த்தால் ஊரை விட்டே விரட்டப்படும் நிலையில் அவர்கள் இருந்தனர்.
இதனால் இந்தக் கொடூரமான கற்பழிப்புகள் தொடர, பொற்கொடி கர்ப்பமடைந்தார். கருவைக் கலைக்கச் சொல்லி அவரைக்கற்பழித்தவர்கள் மிரட்டினர். ஆனால், கலைக்க பொற்கொடி மறுத்துவிட்டார். ஊரைவிட்டு வேறிடத்தில் பதுங்கியிருந்து தனது கருவைக்காத்தார்.
சில நாட்களுக்கு முன் பொற்கொடிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
பொற்கொடிக்கு 16 வயதே ஆவதால், அவரால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று கருதிய அவரது குழந்தையை அரசுத்தொட்டிலில் சேர்க்கமுடிவு செய்தனர்.
ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார் பொற்கொடி.
மேலும், மைனர் பெண்ணான பொற்கொடி கற்பழிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்னன் உடனே காவல்துறைஅதிகாரிகளை அழைத்து பொற்கொடியை இந்த அவல நிலைக்கு உள்ளாக்கிய இருவரையும் உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications