ஜூனியர் ஜெயலலிதா செம்மலை: இளங்கோவன் கிண்டல்
சென்னை:
அரசு மருத்துவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கப் போவதாக அமைச்சர் செம்மலை மிரட்டியிருக்கிறார். மிரட்டல்கள், உருட்டல்கள்மூலம் அவர் ஜூனியர் ஜெயலலிதாவாக மாறிக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பேசி பிரச்சனையைத் தீர்க்க இந்த அரசாலும் செம்மலையாலும் முடியவில்லை. இதில் மிரட்டலுக்குமட்டும் குறைச்சல் இல்லை. இந்த மிரட்டலை எல்லாம் செம்மலை நிறுத்திக் கொள்வது நல்லது. நியாயமான போராட்டதைக் கூட மிரட்டிஒடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக சட்டசபையில் 365 நாளும் ஜெயலலிதா தான் பேசிக் கொண்டிருக்கிறார். எதிர் வரிசை காலியாகத்தான் இருக்கும். இந் நிலையில்வழக்கத்தைவிட 4 நாட்கள் முன்னதாகவே சட்டசபைக் கூட்டத்தை முடிக்கிறார்கள். இது மர்மமாக உள்ளது. விரைவில் டெல்லியில் இருந்துவரும் செய்தி (டான்சி தீர்ப்பு?) இந்த மர்மத்துக்கான முடிச்சை அவிழ்க்கும்.
ராணி மேரிக் கல்லூரி விஷயத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் தனது துறையின் மூலம் வெளியிட்ட உத்தரவில் எந்தத் தவறும் இல்லை.ஜெயலலிதாவைப் போலவே மற்றவர்களுக்கும் அதிகாரம் உள்ளது. இதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சேர் தரவில்லை என்று நிகழ்ச்சியையே புறக்கணித்திருக்கிறார் ஜெயலலிதா. இதேஜெயலலிதா தான் மத வெறியர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக தானாகவே ஓடிச் சென்றுமேடையில் கடைசி வரிசையில் நின்று கையை ஆட்டினார்.
இப்போது மட்டும் ஏன் பிரதமருடன் கடைசி சேரில் உட்காரக் கூடாதா? பிரதமர் பதவிக்கும் அவரது வயதுக்கும் ஜெயலலிதா மரியாதைதந்திருக்க வேண்டும். இதே ஜெயலலிதா தானே தனது கட்சி வேட்பாளர்களைக் கூட மேடையில் முன் ஸ்டூல் போட்டு நிற்க வைத்தார்என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications