வைகோவுடன் ஸ்டாலின் சந்திப்பு: போலீஸ் ஒட்டுகேட்பு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை, திமுக இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இன்று காலை சென்னையிலிருந்து வேலூர் சென்ற ஸ்டாலினை சிறை வளாகத்தில் மதிமுகவினர் வரவேற்றனர். பின்னர் 11 மணிக்குசிறைக்குள் சென்ற ஸ்டாலின் வைகோவைச் சந்தித்தார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.
இந்தச் சந்திப்பின்போது சிறை அதிகாரிகளும் உளவுப் பிரிவு போலீசாரும் சூழ்ந்து நின்று கொண்டனர். இதனால் இருவரும் மனம் திறந்துபேசிக் கொள்ள முடியவில்லை. மேலும் சந்திப்பு அறையில் உள்ள ரகசிய கேமராக்களும் மைக்களுடம் அவர்களை சந்திப்பை பதிவு செய்துகொண்டிருந்தன.
இந்தச் சந்திப்புக்கு பின் சிறை வாயிலில் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின்,
வைகோ சிறையில் நலமுடனும் மிகுந்த மன தைரியத்துடனும் உள்ளார். பொடா சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தான் அவர்எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்.
அவரது உடல் நிலையைத் தான் விசாரித்தேன். அவர் கலைஞரின் உடல் நிலை குறித்து அக்கறையோடு விசாரித்தார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் வெளியேயும் சுந்திரமாகப் பேச முடியவில்லை. சிறைச் சாலைக்குள்ளும் சுதந்திரமாகப் பேச முடியவில்லை.நாங்கள் பேசுவதை ஒரு பெரிய படையே ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. இதனால் அரசியல் எல்லாம் பேசவில்லை.
சிறைக்குள் தான் நான் அவரை இப்போது முதல்முறையாக சந்தித்துள்ளேன். தனித்தனி கட்சியில் இருந்தாலும் அவரை நானும் என்னைஅவரும் பலமுறை சந்த்துள்ளார் என்றார். இத்தனை காலம் சிறையில் இருந்தாலும் வைகோவின் தைரியம் குறையவில்லை. இது போன்றபோராட்ட உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும் என்றார்.
ஸ்டாலினுடன் பரணிகுமார் எம்.எல்.ஏவும் சிறைக்குள் சென்று வைகோவைச் சந்தித்தார்.
வைகோவை திமுக தலைவர் கருணாநிதி இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
ஸ்டாலினின் வளர்ச்சிக்காகத் தான் வைகோவே திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக முன்பு குற்றம் சாட்டப்பட்டது. இப்போது அரசியல்சூழ்நிலைகள் தலைகீழாக மாறியுள்ள நிலையில் ஸ்டாலின்- வைகோ சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications