திரிபுராவில் தீவிரவாதிகள் கொலை வெறி: 20 பேர் பலி
அகர்தலா:
திரிபுராவில் கிராம மக்கள் 20 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களான திரிபுரா புலிகள் படையும், திரிபுரா தேசிய விடுதலைப் படையும் இந்தத் தாக்குதல்களைநடத்தியுள்ளன.
நேற்றிரவு இச் சம்பவங்கள் நடந்தன. மேற்கு திரிபுராவில் உள்ள சித்தி என்ற கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த கிராம மக்களை நோக்கிதிரிபுரா புலிகள் படையினர் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 18 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். இவர்கள் பழங்குடி இனத்தைசாராதவர்கள்.
மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
அதே போல வடக்கு திரிபுராவில் குமார்காட் கிராமத்தில் திரிபுரா தேசிய விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தி இரண்டு பேரைக்கொன்றனர். கொல்லப்பட்ட இருவரும் பழங்குடியினத்தைச் சாராதவர்கள் ஆவர்.
திரிபுராவில் தீவிரவாத இயக்கங்கள் அனைத்துமே பழங்குடி இனத்தினருக்கு ஆதரவானவையாக செயல்பட்டு வருகின்றன. அந்த மாநிலபூர்வீக இன மக்கள் தவிர மற்றவர்களை அங்கு வசிக்க இந்த தீவிரவாத இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
வங்கதேசத்தில் தான் இந்தத் தீவிரவாதிகளின் முகாம்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆனால், இது பழங்குடி, பழங்குடியல்லாதோர் இடையே நடக்கும் மோதல் அல்ல. தீவிரவாதிகள் யாரையெல்லாம் கொல்ல முடியுமோஅவர்களை எல்லாம் கொன்று குவித்து வருகின்றனர் என அம் மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications