பெங்களூரில் திமுக கொடியை அகற்றியதால் கலவரம்: போலீஸ் தடியடி
பெங்களூர்:
பெங்களூரில் சில கன்னட வெறியர்கள் திமுக கொடியை அகற்றியதைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது.இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலவரக்காரர்களைக் கலைத்தனர்.
கடந்த 6ம் தேதி கன்னடக் கொடியை யாரோ சேதப்படுத்தி விட்டனர். போலீசார் இது தொடர்பாக 3 பேரைக் கைதுசெய்திருந்தனர்.
இந்நிலையில் கொடி சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் இன்று சில கன்னடஅமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது சிலர் அந்தப் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த திமுக கொடிக் கம்பத்தை வெட்டிச் சாய்த்தனர். இதையடுத்துஅப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. திமுகவினரும் தமிழர்களும் ஸ்ரீராமபுரம் போலீஸ் நிலையத்தின் முன்கூடி, திமுக கொடிக் கம்பத்தை வெட்டியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம்போட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கைலப்புஏற்பட்டது. பொது மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் தமிழர்கள் மீதுவீசினர்.
இச் சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. நிலைமை தற்போது கட்டுக்குள்இருப்பதா போலீசார் தெரிவித்தார்.
பெங்களூரில் ஸ்ரீராமபுரம் முழுக்க முழுக்க தமிழர்கள் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. காவிரிக் கலவரம்நடந்தபோது இந்தப் பகுதியை கன்னட வெறியர்கள் பயங்கரமாகத் தாக்கினர் என்பது நினைவுகூறத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications