ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது: அலுவலகங்கள் இயங்கவில்லை
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுகைதாகியுள்ளனர். இதனால் இன்று அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.
நிதி நிலையைக் காரணம் காட்டி போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு பறித்துள்ளது. திடீரென ஓய்வூதியசலுகைகள் கூட பறிக்கப்பட்டன. இதையடுத்து இவற்றைத் திரும்பத் தரக் கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந் நிலையில் இன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் 1,000 அரசு ஊழியர்கள் கூடி நின்று அரசுக்கு எதிராகக் கோஷம் போட்டனர்.அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதே போல சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகக் கட்டடமான எழிலகத்தில் எதிரே சுமார் 600 பேர் சாலை மறியலில்ஈடுபட்டதால் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் கலெக்டர் அலுவலத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வரை நடு ரோட்டில் உட்கார்ந்து ஆசிரியர்களும் அரசுஊழியர்களும் போராட்டம் செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு வேன்களில் கொண்டு செல்லப்பட்டனர்.
திருச்சியிலும் இதே போன்று போராட்டம் நடத்திய ஆசிரியைகளும் ஆசிரியர்களும் கைதாகியுள்ளனர்.
கோவையில் செஞ்சிலுவைச் சங்கம் முன் கூடி போராட்டம் நடத்திய 2,000 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல தமிழகம்முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் போராட்டம் நடத்திய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் இன்று மாவட்ட தலைநகர்களில் அரசு அலுவலகங்களில் எந்தப் பணிகளும் நடக்கவில்லை. கோடை விடுமுறைகாரணமாக ஆசிரியர் போராட்டத்தால் பள்ளிகளுக்கு பிரச்சனை வரவில்லை.
முதலில் கோஷ்டி கோஷ்டியாக போராட்டம் நடத்தி வந்த அரசு ஊழியர்களின் அனைத்துச் சங்கங்களும் இப்போது ஒன்றாகக்கூடிவிட்டன. இதனால் போராட்டம் வலுவடைந்துள்ளது.
போராட்டம் குறித்து அரசு ஊழியர் போராட்டக் குழுவின் தலைவர் சூரியமூர்த்தி கூறுகையில், அடுத்த கட்டமாக நாளை முதல்பிரச்சார இயக்கம், போராட்ட ஆயத்த மாநாடுகள் நடத்தப்படும். அதிலும் அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்க முன்வராவிட்டால், ஜூலை 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவோம். எஸ்மா சட்டம் உள்படஎந்தச் சட்டத்தைக் காட்டி அரசு பயறுத்தினாலும் அஞ்ச மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications