ஜி.எஸ்.எல்.வி. விண்ணில் பாய்ந்தது: செயற்கை கோளை செலுத்தியது

Subscribe to Oneindia Tamil

GSLV blasting off at Sriharikottaஸ்ரீஹரிகோட்டா:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்த ஜி.எஸ்.எல்.வி.-டி 2 சோதனை ராக்கெட் இன்று மாலை 4.58மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

விண்ணில் பாய்ந்த 17வது நிமிடத்தில் (920வது நொடி) ஜிசாட்-2 செயற்கை கோளை அதன் புவி வட்டப் பாதையில் வானில்ஏவியது. இந்த செயற்கைக் கோள் 1,800 கிலோ எடை கொண்டதாகும்.

ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தாவன் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

ராக்கெட் ஏவப்பட்டதும் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்சியைத்தெரிவித்துக் கொண்டனர். அங்கு உற்சாகம் கரை புரண்டோடியது. விண்வெளி மைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஸ்ரோதலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் மகிழ்ச்சியில் கண் கலங்கி நின்றிருந்தார். அவரை பல விஞ்ஞானிகளும் சந்தித்து கட்டித் தழுவிமகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

GSLV இந்த ராக்கெட் சோதனை பிரதமர் வாஜ்பாய்க்கு மட்டும் பிரத்யோகமாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. விண்ணில் ராக்கெட்சரியாகப் பாய்ந்ததும் கஸ்தூரிரங்கனை தொலைபேசியில் அழைத்த வாஜ்பாய் அவைரயும் விஞ்ஞானிகளையும் பாராட்டினார்.

இந்த ராக்கெட் சோதனை வெற்றி பெற்றுவிட்டதாால் இனி இந்தியாவே தனது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திக்கொள்ள முடியும். மேலும் மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.

Geosynchronous Satellite Launch Vehicle என்ற இந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டெளன் நேற்றுஅதிகாலை 2 மணிக்குத் தொடங்கியது. ஜி.எஸ்.எல்.வி. சோதனையை உலகின் மற்ற நாடுகளும் ஆர்வத்துடன் கவனித்தன.இதற்காக பல நாட்டு செய்தியாளர்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் குவிந்திருந்தனர்.

49 மீட்டர் உயரமும், 414 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட் இன்று மாலை 4.58 முதல் 5.43க்குள் எந்த நேரத்திலும்செலுத்தப்படலாம் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

திட்டமிட்ட நேரத்தில் மிகச் சரியாக ராக்கெட் ஏவப்பட்டது. அதே போல திட்டமிட்டபடி 5.15 மணிக்கு செயற்கைக் கோளைபூமியில் இருந்து சுமார் 180 கி.மீ. உயரத்தில் நீள் வட்டப் பாதையில் இந்த ராக்கெட் செலுத்தியது. ராக்கெட் விண்ணில்ஏவப்பட்டவுடன் அதன் டெலிமெட்ரி சிக்னல்களை கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாடு அறையும்,இந்தோனேஷியாவில் பியாக் என்ற இடத்தில் உள்ள இஸ்ரோ மையமும் பெற ஆரம்பித்துவிட்டன.

இனி செயற்கைக் கோளை இந்த இரு மையங்களும் ரேடியோ சிக்னல்கள் மூலம் கட்டுப்படுத்தும். இப்போது 180 கி.மீ. உயரத்தில்உள்ள செயற்கைக் கோள் 36,000 கி.மீ. உயரத்துக்கு உயர்த்தப்படும். இதற்கு செயற்கைக் கோளில் உள்ள சிறிய பைரோஜெனிக்ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும்.

தனது நீள் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக் கோள் நிறுத்தப்பட்டுவிட்டால் அது தொடர்ந்து பூமியை சுற்றி வரும். அப்போதுசெயற்கைக் கோளுக்கும் பூமிக்கும் இடையிலான குறைந்த பட்ச தூரம் 180 கி.மீயாகவும், அதிக பட்ச தூரம் 36,000கி.மீட்டராகவும் இருக்கும்.

கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி முதல் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்டது. அது 1,540 கிலோ எடை கொண்டஜிசாட்-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது. இப்போது இரண்டாவது சோதனையும் வெற்றிகரமாக நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+