மதுரை கந்து வட்டி கும்பலை அடக்க பாய்கிறது வருமான வரித்துறை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் போலீசாரின் உதவியோடு கந்து வட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள ரெளடிகளை ஒழிக்க வருமான வரித்துறைநடவடிக்கை எடுக்க உள்ளது.

மதுரையையே கலக்கி வரும் இந்தக் கும்பல்களை வருமான வரித்துறையினர் கூட நெருங்க முடியாத அளவுக்கு நிலைமைஉள்ளது. அடியாள் பலம், அரசியல் பின்னணி, போலீசாரின் உதவி, ஜாதிரீதியிலான ஆதரவு ஆகியவை எல்லாம் ஒன்றாய் சேர்ந்தஅசைக்க முடியாத புள்ளிகள் இவர்கள்.

இவர்களிடம் கடன் வாங்கினால் மானம், மரியாதை, கற்பு அனைத்தையும் இழக்க வேண்டும். பணம் தராவிட்டால் வீட்டுக்குழந்தைகளைக் கடத்துவார்கள், பெண்களை அவமதிப்பார்கள். அத்தோடு சொத்துக்களையும் பறித்துக் கொள்வார்கள்.

இவர்களது பிரம்மாண்டமான வீடுகளில் ரெய்ட் நடத்தச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளே தாக்கப்பட்டுள்ளனர். ரெய்ட்நடத்திய காரணத்தால் ஒரு அதிகாரியை அவரது குவார்டர்ஸ் அருகே வைத்து ஒரு கும்பல் வெட்டியது. சமீபத்தில் தற்கொலைசெய்து கொண்ட பட அதிபர் ஜி.வியின் சாவுக்கும் காரணமாக இருந்தது இதே கும்பல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்ட் நடத்த போலீசாரின் உதவியை வருமான வரித்துறையினர் கோரிய போதெல்லாம், ரெய்ட் விஷயம் கந்து வட்டி கும்பலுக்குபாஸ் செய்யப்பட்டது. இதனால் போலீசாரை ஒதுக்கிவிட்டு வருமான வரித்துறையினரே நேரில் களத்துக்குச் சென்றால்தாக்கப்படுவது சகஜமாகிவிட்டது.

இந் நிலையில் ஜி.வியின் மரணம் வருமான வரித்துறையின் உயர் மட்டத்தினரையே கலக்கியுள்ளது. ஒரு காலத்தில் பெரியமூட்டைகளில் சுமார் 3 கோடியை நிரப்பிக் கொண்டு வந்து வருமான வரி கட்டிப் போனவர் ஜி.வி. கடன் தொல்லைகள்இருந்தாலும் தனது வருமான வரி விஷயத்தில் மிக நியாயமாக நடந்து கொண்டனர்.

இதனால் மதுரை கந்து வட்டிக் கும்பல்களை அடக்க வருமான வரித் தலைமையகத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளது. மேலும்மத்திய நிதியமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மதுரை கந்துவட்டிக் கும்பல்கள் குறித்து மாநில அரசிடம்விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து இந்தக் கும்பல்களின் முழுப் பட்டியலை உடனே வருமான வரித்துறையிடம் ஒப்படைக்குமாறும், அந்தக்கும்பல்களை ஒழிக்க வருமான வரித்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு உதவி புரியுமாறும் மதுரை நகர போலீஸ்கமிஷ்னருக்கு உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதாவிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மதுரையின் சின்ன, பெரிய கந்து வட்டி தாதாக்களின் முழு விவரமும் வருமான வரித்துறையினரிடம்போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து மதுரை வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

அவசரத்துக்கு கடனை வாங்கிவிட்டு அநியாய வட்டி கட்ட முடியாமல் போனவர்களது சொத்துக்களை இந்த கந்து வட்டிக்கும்பல்கள் சுருட்டி வருகின்றன. இவ்வாறு பறிக்கப்படும் சொத்துக்களை தமிழகத்தில் வைத்து பத்திரப் பதிவு செய்வதில்லை.கேரளா, ஆந்திரா, ஏன் குஜராத்தில் கூட பத்திரப் பதிவு செய்கிறார்கள்.

மதுரையில் மட்டும் 130 பெரிய தாதாக்கள் வட்டித் தொழில் நடத்தி வருகின்றனர். இவர்கள் தவிர சிறிய கும்பல்களும் உண்டு.மதுரை தவிர கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு ஆகிய இடங்களிலும் இக் கும்பல்கள் பரவியுள்ளன.

இவர்களது பட்டியலை போலீசார் இப்போது எங்களிடம் வழங்கியுள்ளனர். ரூ. 1 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் கடன்வாங்கியவர்கள் தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களை இந்தக் கும்பல்களிடம் இழந்துள்ளனர்.

Anbuchezhian இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம் இவர்கள் தங்களை பைனான்சியர்கள் என்று பதிவு செய்துவைத்திருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், இவர்களை நாங்கள் மடக்க முடியும். அதற்கு போலீசாரின் உதவி அவசியம் என்றனர்.

ஒரு வழியாய் இந்தக் கும்பல்களை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் களத்தில் இறங்கியுள்ளது நிம்மதியைத் தந்தாலும்இவர்களுக்கு உதவி வரும் போலீசாரைக் கட்டுப்படுத்தாத வரை இந்த முயற்சி வெல்லப் போவது இல்லை.

ஜி.விக்குப் பணம் கொடுத்துவிட்டு மிரட்டியதாகக் கூறப்படும் அன்புச்செழியனிடம் இதுவரை போலீசார் விசாரணை ஏதும்நடத்தியதாகத் தெரியவில்லை. இவரது அரசியல் பலமும், மன்னார்குடி வி.வி.ஐ.பிக்கள் ஆதரவும் இவரைக் காத்து வருவதாககூறப்படுகிறது.

இவரும் வருமான வரித்துறையினரிடம் சிக்குவார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+