For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை கந்து வட்டிக் கும்பலின் மிரட்டல் காரணம்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடனாகத் தந்த ரூ. 25 லட்சத்தை உடனே தரச் சொல்லி மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவர் நெருக்கடிதந்ததால் தான் பட அதிபரும் மணி ரத்னத்தின் அண்ணனுமான ஜி.வி. தற்கொலை செய்து கொண்டதுதெரியவந்துள்ளது. இந்த பைனான்சியர் கந்துவட்டி தரும் ஆசாமி என்று தெரிகிறது.

ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு நாளைக்கு இவ்வளவு வட்டி என்று வாங்கும் ஆசாமியாம்.

சொக்கத் தங்கம் படத்தை வெளியிட்டபோது மிகவும் பதற்றத்தில் இருந்திருக்கிறார் ஜி.வி. இந்தப் படம் மட்டும்வெற்றி பெறாவிட்டால் என்னால் தலை நிமிரவே முடியாது அந்த அளவுக்கு கடன் தொல்லை சுற்றி வளைத்துள்ளதுஎன தனது நண்பர்களிடம் கூறி வந்தாராம் ஜி.வி.

விஜய்காந்துக்கு மட்டும் ரூ. 4 கோடி வரை சம்பளமாகத் தந்து படத்தைத் தயாரித்து முடிக்கவே ரூ. 8 கோடிசெலவாகிவிட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அப்போதே ஜி.வி. பெரும் அப்செட்ஆகிவிட்டதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

பேசால் செத்துவிடலாமா என்று தோன்றுவதாக தனது நண்பர்களிடம் அவர் கூறியுள்ளார். அவர்கள் ஜி.வியைஅவ்வப்போது தேற்றி அனுப்பியுள்ளனர்.

சென்னை இந்தியன் வங்கியில் மட்டும் அவருக்கு ரூ. 4 கோடி வரை கடன் உள்ளதாகத் தெரிகிறது. இந் நிலையில்அவசரத்துக்காக தனது நண்பர் ஒருவரிடம் ரூ. 25 லட்சத்தை ஜி.வி. வாங்கியுள்ளார். ஆனால், அதை அந்த நண்பர்மதுரையைச் சேர்ந்த கந்து வட்டி பைனான்சியர் ஒருவரிடம் வாங்கித் தந்தாராம்.

அந்தப் பணத்தை பாைன்சியர் கேட்டு தொல்லை கொடுக்க, பலரிடமும் உதவி கேட்டுள்ளார் ஜி.வி. ஆனால்,அவரால் பணத்தைப் புரட்ட முடியவில்லை. பணத்தைக் கேட்டு நண்பரும் பைனான்சியரும் டார்ச்சர் மேல் டார்ச்சர்தர, சனிக்கிழமை எப்படியாவது பணத்தைத் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

ஆனால், பணத்தை கடைசி நிமிடம் வரை தேற்ற முடியாமல் போனது. இந் நிலையில் சனிக்கிழமை காலையும் பணம்கேட்டு 2,3 முறை போன்கள் வரவே மனமுடைந்து போன ஜி.வி. தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

பணத்தைத் தராவிட்டால் வீட்டுக்கு ஆள் (ரெளடிகள்) அனுப்புவேன், வழக்குப் போடுவேன் என்று பைனான்சியர்கூறியதாகத் தெரிகிறது. மதுரையின் செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜாதி பலம் கொண்ட அந்த பைபான்சியரிடம்சிக்கித் தவித்துள்ளார் ஜி.வி. இந்த கந்து வட்டி பைனாசியர் மன்னார்குடி கும்பலின் பினாமி என்ற பேச்சும் கூடஉண்டு.

சமீபத்தில் இவர் வீட்டில் ரெய்ட் நடத்திய வருமான வரி அதிகாரியையே கையை வெட்டியவர் இந்த கந்து வட்டிதாதா.

வீனல் ஸ்டுடியோவின் உரிமையாளரின் மகனான ஜி.வி. மிக மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.பணத்துக்காக கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கி அசிங்கப்பட வேண்டிய நிலை வந்துவிடுமோ என்று பயம்து தான்அவர் தற்கொலைக்கு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், இப்போது பணத்தைக் கேட்டு டார்ச்சர் தந்த அந்த மதுரை பாைன்சியரிடமும் நண்பரிடமும் போலீசார்விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இவர் தவிர சென்னை, மும்பையைச் சேர்ந்த சில பைனான்சியர்களிடமும்விசாரணை நடக்கும் என போலீசார் தெரிவித்தனர். இவர்களும் தங்கள் பணத்தைக் கேட்டு அடிக்கடிதொலைபேசியில் பேசியதாக ஜி.வியின் உதவியாளர் மணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஏகப்பட்ட கடன் இருந்தாலும் கூட ஜி.விக்கு சொதுக்களும் உண்டு. சென்னை அருகே கிட்டத்தட்ட 75 ஏக்கர் நிலம்வரை அவருக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மார்க்கெட் விலை ரூ. 25 கோடி என்றும் சில கோடிகள்குறைவாகக் கிடைத்தாலும் கூட அதை விற்றுவிட்டு கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழவும் அவர் முடிவுசெய்ததாகத் தெரிகிறது.

இதற்காக பல ரியல் எஸ்டேட் ஆட்களிடமும் பேசி வந்துள்ளார். ஆனால், நிலத்தை உடனே வாங்க யாரும் முன்வராததால் ஜி.வி. சிக்கலில் இருந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X