ரயிலில் மயக்க மருந்து கொடுத்து ராணுவ வீரரிடம் கொள்ளை
சென்னை:
டெல்லியிலிருந்து சென்னை வந்த ராணுவ வீரருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த ரூ. 22,000 பணம் திருடப்பட்டுள்ளது.
ராணுவ டிரைவரான ஜெயப் பிரகாஷ் காஷ்மீரில் பணி புரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வருவதற்காக டெல்லி வழியாகதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை புறப்பட்டார். டெல்லியில் செவ்வாய்க்கிழமை இரவு ரயில் ஏறினார்.
கிளம்பிய சிறிது நேரத்தில் கையோடு கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். அப்போது அருகில்இருந்த இரண்டு பேர், அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். அதைக் குடித்தசிறிது நேரத்தில் ஜெயப் பிரகாஷ் மயக்கமடைந்தார்.
அதன் பிறகு வியாழக்கிழமை காலை சென்னை சென்டிரலுக்கு ரயில் வந்து நின்ற பிறகு தான் அவருக்கு மயக்கம் தெளிந்துள்ளது.
பதறியடித்து எழுந்த அவர் தனது சூட்கேஸைத் தேடினார். ஆனால் சூட்கேஸ் இல்லை. அதில் வைத்திருந்த ரூ. 22,000 பணம் திருடுபோயிருந்தது.
வெறுத்துப் போன ஜெயப்பிரகாஷ், ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications