ஜெவை புகழ்வதில் சட்டமன்றத்தில் அதிமுக- பாஜக. கடும்போட்டி
சென்னை:
ஜெயலலிதா ஒரு போல்டு லேடி, கோல்டு லேடி, டேரிங் லேடி. மொத்தத்தில் அவர் ஒரு சகலாகலாவல்லி என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.முரளிதரன் சட்டசபையில் ஐஸ் மழை பொழிந்தார்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பாதங்களைத் தொட்டு.. என்று குறிப்பிடாமல் எந்த அமைச்சரும் பேசவே ஆரம்பிப்பதுஇல்லை.
பேசுவது 3 நிமிடமாக இருந்தாலும் அதில் 2 நிமிடமாவது அம்மா, தாயே, தெய்வமே என்று புகழ்ந்துவிட்டுத் தான் பேசுகின்றனர்.அமைச்சர்கள் இப்படியென்றால் அதிமுக எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதாவைப் பாராட்டுவதில் போட்டாபோட்டி போட்டு வருகின்றனர்.
பலரால் தொடர்ந்து இலக்கிய நடையில் பேச முடிவதில்லை. இருந்தாலும் ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டு வந்து ஜெயலலிதாவைப்புகழ்ந்து கவிதை நடையில் பேசிவிட்டுத் தான் தொகுதிக்கான கோரிக்கைகளையே வைக்கின்றனர்.
இவர்கள் இப்படியென்றால் சமீபத்தில் அதிமுகவுக்குத் தாவிய ஹக்கீம் போன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போடும் ஜால்ரா சத்தத்தில் காதில்ரத்தமே வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
ஜெயலலிதாவைப் புகழந்து பேசும்போதெல்லாம் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மேஜைகளை தட்டி சத்தம் எழுப்புவதும்வழக்கமாகிவிட்டது. இதனால் அவையில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை மேஜைகள் அதிர்கின்றன.
சமீபத்தில் நலத்துறை அமைச்சர் செம்மலை அதிக உற்சாகமாகி இரு கைகளாலும் மேஜையைப் போட்டு குத்து குத்து என்று குத்தினார். இதில்அவர் வைத்திருந்த சில பைல்களும் நசுங்கின. அவரை அருகில் இருந்த அமைச்சர் தலையிட்டு அமைதிப்படுத்த வேண்டிய நிலைஉருவானது.
இவ்வாறு சட்டசபை சத்த சபையாகி மாறிக் கொண்டுள்ள நிலையில் ஜெயலலிதாவைப் புகழ்வதில் அதிமுகவினரை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் முயற்சிகளில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதாவை இவர்கள் முதல்வர் என்று குறிப்பிடுவதில்லை. அதிமுகவினரைப் போலவே அம்மா, இதய தெய்வம், புரட்சித் தலைவிஎன்று தான் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக பா.ஜ.கவைச் சேர்ந்த முரளிதரன் அதிமுக எம்.எல்.ஏக்களே பொறாமைப்படும் அளவுக்கு ஜெயலலிதாவைப் புகழ்ந்துதள்ளுகிறார். இத்தனைக்கும் அவர் பேசும் தமிழ் மிகக் கொச்சையாகத் தான் உள்ளது. காரணம் இவரது தாய்மொழி வேறு. இருந்தாலும்கைத்தட்டல்களை அள்ளி விடுகிறார்.
தமிழ்த்தாய் ஜெயலலிதா அவர்களே என்று தான் தனது பேச்சையே தொடங்குகிறார்.
நேற்று அவர் சட்டமன்றத்தில் பேசியதாவது: ஜெயலலிதா அவர்களை ஏற்கனவே மெகா முதல்வர், தமிழ்த் தாய் என்று நான் கூறியுள்ளேன்.சமீபத்தில் பெங்களூரில் நடந்த கல்யாண விழாவில் நான் கலந்துகொண்டேன்.
அந்த ஊர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் என்னிடம், உனக்குத்தான் தமிழே தெரியாதே, எப்படி அங்கு சமாளிக்கிறாய் என்று ஆச்சரியத்துடன்கேட்டார். அதற்கு இன்னொருவர், தமிழ்நாடு முதல்வர் ஒரு ஆல்ரவுண்ட் லேடி. எந்த மொழியில் பேசினாலும் அவருக்குப் புரியும் என்றார்.
சட்டசபையில் யார் என்ன கேட்டாலும், கோரிக்கை வைத்தாலும், புகார் கூறினாலும், குறிப்பே எடுக்காமல் சட்டென்று பதில் சொல்வதில்ஜெயலலிதா கெட்டிக்காரர். அவரைத் தமிழில் பாராட்ட வேண்டும் என்றால் சகலகலாவல்லி என்று சொல்லலாலம்.
ஜெயலலிதா ஒரு போல்டு லேடி, கோல்டு லேடி, டேரிங் லேடி. முன்னாடியெல்லாம் டிவியில் சித்தி பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது10 மணிக்கு அம்மா என்ன சொன்னார் என்று தான் ஜெயா டிவியில் பார்க்க ஆரம்பித்திருக்கிறது தமிழகம் என்றார் முரளிதரன்.












Click it and Unblock the Notifications