ஜெயலலிதா முன்னேற்றக் கட்சி தான் அதிமுக: ராமதாஸ்
சென்னை:
ஒழுங்காக ஆட்சி நடத்தத் தெரியாத ஜெயலலிதா ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது நல்லது என்று பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக ராமதாஸை சட்டமன்றத்தில் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
இந்தியாவில் 36 மாநிலங்களும் முதல்வர்களும் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தை மட்டும் ஜெயலலிதா ஏதோ தனி நாடு போலவும்இவர் ஏதோ பிரதமர் போலவும் நடந்து கொள்கிறார்.
ஆட்சிக்கு வந்தபோது நாட்டிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவேன் என்று ஜெயலலிதா வீர வசனம் பேசினார். ஆனால்,இப்போது தமிழகத்தில் ஜெயலலிதா இருண்ட ஆட்சி தான் நடத்தி வருகிறார். தொழில்துறையிலேயோ, சமூக நீதியிலோ, பொருளாதாரவளர்ச்சியிலோ தமிழகம் முதலிடத்தில் இல்லை.
ஜெயலலிதாவைத் துதி பாடுவதிலும், மனித உரிமைகளைப் பறிப்பது, பத்திரிக்கையாளர்களை ஒடுக்குவது, மாணவர்களை அடக்குவதுஆகியவற்றிலும் தான் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
நல்லாட்சி நடத்த முடியாவிட்டால் தானாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது ஜெயலலிதாவுக்கு நல்லது. கடந்ததேர்தலில் மொத்தமே 11 சதவீத வாககாளர்கள் தான் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள். தைரியம் இருந்தால் மீண்டும் தேர்தல் மூலம்மக்களைச் சந்திக்க ஜெயலலிதா முன் வர வேண்டும்.
அதை விட்டுவிட்டு அறிவுக்கு அப்பாற்பட்ட வகையில் பேசுவதையும் தான்தோன்றித்தனமாக உளறுவதையும் ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வரலாறு கூட தெரியாத ஜெயலலிதா பா.ம.கவை அர்த்தமில்லாமல் விமர்சித்து வருகிறார். மரம் வெட்டி கட்சி என்கிறார். இதன் மூலம்வன்னியர்களை கேவலப்படுத்துகிறார். இட ஒதுக்கீட்டுக்காக நடந்த அந்த போராட்டத்தில் அதிமுக ஆட்சி ஒரே நாளில் 21வன்னியர்களைக் கொன்று குவித்தது. இதனால் மரங்களை வெட்டி போக்குவரத்தைத் தடுத்தார்கள் மக்கள். இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத்தெரியாது.
இனி ஜெயலலிதா முன்னேற்றக் கட்சி என்று தான் அதிமுகவை அழைப்பேன். தர்மபுரியில் மாணவிகளை பஸ்சில் வைத்து கொழுத்திய கட்சிதான் இந்த ஜெயலலிதா கட்சி.
ஜெயலலிதாவுக்கு மண்ணும் தெரியாது, மரமும் தெரியாது. அவருக்குத் தெரிந்தது நாட்டியம் மட்டும்தான்.
தமிழகத்துக்கு பல ரயில்வே திட்டங்களைக் கொண்டு வர மத்திய ரயில்வேதுறை இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி பல முயற்சிகளை எடுத்துவருகிறார். ஆனால், இதனால் அவருக்கும் பா.ம.கவுக்கும் நல்ல பெயர் ஏற்பட்டுவிடும் என்று கருதும் ஜெயலலிதா அந்தத் திட்டங்களுக்குமுட்டுக் கட்டை போட்டு வருகிறார். இது தான் தமிழக மக்கள் மீது ஜெயலலிதா வைத்திருக்கும் அக்கறை.
போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பா.ம.க. முழு ஆதரவு வழங்கி வருகிறது என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications