பைனான்சியரிடம் ரூ.50 லட்ச வைர நகைகள் கொள்ளை
சென்னை:
சென்னையில் சினிமா, கார்களுக்கு பைனான்ஸ் செய்யும் டாக்டர் ஒருவரின் வீட்டிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ளநகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவ்வீட்டு வேலைக்காரியைப் போலீசார்கைது செய்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஹாங்டன் சாலையைச் சேர்ந்தவர் டாக்டர் பாரத் மேத்தா. டாக்டர் தொழிலுடன்இவர் சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கடன் வழங்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் கார்வாங்குபவர்களுக்கும் அவர் கடன் வழங்கி வருகிறார்.
டாக்டர் மேத்தாவின் வீட்டில் அரியலூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற ராஜுவும் அவருடைய மனைவிஆரோக்கியமும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் டாக்டர் மேத்தாவின் மனைவியான அனிதா மேத்தா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் பூஜைஅறையில் இருந்தபோது ஆரோக்கியம் சத்தமே இல்லாமல் பீரோவை சாவி போட்டுத் திறந்துள்ளார்.
பின்னர் அதிலிருந்த ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும், ரூ.8 லட்சம் ரொக்கப் பணத்தையும்திருடியுள்ளார். பின்னர் அதைத் தன் கணவனிடம் கொடுத்து அவரை வெளியே அனுப்பி விட்டார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பீரோவைப் பூட்டி விட்டு சாவியை வழக்கமாக டாக்டர் மேத்தா தம்பதியர் வைக்கும்இடத்திலேயே வைத்து விட்டார் ஆரோக்கியம். சிறிது நேரம் கழித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்தன் உறவினரைப் பார்க்கப் போவதாகக் கூறிவிட்டு அவரும் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் தற்செயலாக பீரோவைத் திறந்து பார்த்த அனிதா மேத்தா, அதிலிருந்த நகைகள், பணம்திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் சேத்துப்பட்டு போலீசாரிடம் புகார்கொடுத்தார்.
உடனடியாக விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி ஆரோக்கியத்தைக் கைது செய்தனர். அவரிடம்நடத்தப்பட்ட விசாரணையின் போதுதான் அவர் நகைகள் மற்றும் பணத்தைத் தன் கணவரிடம் கொடுத்து அவரைஅரியலூருக்கு அனுப்பியுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து ராஜுவைப் பிடிக்க தனிப் போலீஸ் படை அரியலூருக்கு விரைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications