For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டமன்ற கூட்டம் முடிவடைந்தது: 35 நாளில் 365 முறை பதில் சொன்ன ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. கிட்டத்தட்ட 35 நாட்கள் நடந்த இந்தத் கூட்டத் தொடரில் முதல்வர்ஜெயலலிதா 365 முறை இடைமறித்து பதிலளித்துள்ளார்.

கூட்டத் தொடரை முடித்து வைத்து காளிமுத்து பேசியதாவது:

இந்தக் கூட்டத் தொடர் கடந்த 35 நாட்கள் நடந்தது. 140 மணி நேரம் கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா 365 முறைஇடைமறித்து பதில் தந்துள்ளார்.

இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 127 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 49 மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

அவை விதி எண் 110ன்கீழ் மொத்தம் 27 அறிக்கைகள் படிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல்வர் ஜெயலலிதா 12 அறிக்கைகளை தாக்கல்செய்துள்ளார். 8 உரிமை மீறல் பிரச்சினைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் 2ன் மீது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மற்றவை, உரிமைகுழுவின் பரிசீலனையில் உள்ளன.

89 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றில் 29 தீர்மானங்களுக்கு பதில் கூறப்பட்டு விட்டது. 234 உறுப்பினர்களில்92 பேர் சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொண்டுள்ளனர்.

எதிர்க் கட்சிகளுக்குப் பேச வாய்ப்பளிக்கவில்லை என்ற குற்றச் சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. ஆளுங்கட்சியில், முதல்வர், அமைச்சர்கள்போக 113 உறுப்பினர்கள் உள்ளனர். விகிதாச்சார அடிப்படையில் இவர்கள் பேசுவதற்கு 54 சதவீத நேரம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், 30 சதவீத நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. மற்ற 70 சதவீத நேரமும் எதிர்க் கட்சியினருக்கே ஒதுக்கப்பட்டது. ஆளுங்கட்சிநேரத்தை தியாகம் செய்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முதல்வரின்பெருந்தன்மைதான் காரணம்.

அவை நடவடிக்கைகளின்போது அவைக்கு குந்தகம் விளைவித்ததற்காக திமுக உறுப்பினர்கள் பரிதி இளம்வழுதி, அன்பழகன் ஆகியோர்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முறையாக என்னை அணுகி தங்களது தவறை ஒத்துக் கொண்டிருந்தால் அவர்களும் அவைநடவடிக்கைகளில் கலந்து கொண்டிருக்க முடியும் என்றார் காளிமுத்து.

இந்தக் கூட்டத் தொடரின்போது காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்ட் உறுப்பினர்ளுக்கும் அரசுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம்ஏற்பட்டது. தினமும் வெளிநடப்புகளும் மோதல்களும் அமளிதுமளியுமான அவை பரபரபப்பாகவே இருந்தது.

பொடா சட்டமும், ராணி மேரிக் கல்லூரி விவகாரமும் தான் இந்தக் கூட்டத் தொடரில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இந்த விவகாரத்தில்ஸ்டாலின் கைது செய்யப்பட்டதும் இந்தக் கூட்டத் தொடரின்போது தான்.

இக் கூட்டத் தொடரில் பா.ம.கவை முதல்வர் ஜெயலலிதா வாங்கு வாங்கு என்று வாங்கினார். ராமதாசுக்கு திட்டுக்கு மேல் திட்டு விழுந்தது.மார்க்சிஸசத்தையும் விமர்சித்தார் ஜெயலலிதா.

நக்கீரன் ஆசிரியர் பொடாவில் கைதானதும் இக் கூட்டத் தொடரின்போது தான். தாயின் பெயரை குழந்தைகளுக்கு இனிஷியலாகவைப்பது, பெண்களைக் குறிக்கும் வார்த்தையான குடிமகள் என்ற பதத்தை பிரயோகிப்பது தொடர்பான உத்தரவு ஆகியவைபிறப்பிக்கப்பட்டது.

இந்து நாளிதழ், முரசொலி மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது உரிமை மீறல்பிரச்சனை கொண்டு வரப்பட்டது.

கூட்டத் தொடர் முடிவடைவதையொட்டி வழக்கமாக எம்.எல்.ஏக்களுக்கு தரப்படும் இரவு விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார்ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X