கும்பகோணம் நகைக் கடை அதிபர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணத்தில் நகைக் கடை அதிபரின் பூட்டிய வீட்டை உடைத்துக் கொண்டு புகுந்த கொள்ளையர்கள் சுமார்100 பவுன் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கும்பகோணம் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன் ராம். நகைக் கடை அதிபரான இவர் தன் வீட்டைப்பூட்டிக் கொண்டு வெளியூருக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவருடைய வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு ஒரு கொள்ளைக் கும்பல் உள்ளேபுகுந்துள்ளது. பின்னர் அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.

மோகன் ராமின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டுள்ளதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாகவெளியூரிலிருந்த அவருக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து கும்பகோணத்திற்கு வந்த மோகன் ராம் வீட்டிலிருந்து பீரோவும் உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த சுமார் 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதும் அவருக்குத் தெரியவந்தது.

இதையடுத்து போலீசாரிடம் அவர் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொள்ளையர்கள் சமீபகாலமாக நகைக் கடைகளையும், அவற்றின் அதிபர்களையும் குறிவைத்துத் திருடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் வேலூரில் நகைக் கடை அதிபர் உள்ளிட்ட 3 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டுநகைகளைக் கொள்ளையடித்ததும், சென்னையில் திருச்சியைச் சேர்ந்த நகைக் கடை அதிபரிடம் வழிப்பறிக்கொள்ளை நடந்ததும் நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+