காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் தமிழக இளம் வீரர் மரணம்
திருச்சி:
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் தமிழக வீரரான லெப்டினணட் சகாய செல்வராஜ் உயிரிழந்தார். அவரது உடல் திருச்சியில்அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
![]() |
லெப்டினண்ட் சகாய செல்வராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் கலெக்டர் மணிவாசன். உள்படம் சகாய செல்வராஜ்.
(படம் நன்றி-தினகரன்)
திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சகாயசெல்வராஜும் (வயது 23) ராணுவத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் காஷ்மீரில் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியபோது நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.
அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து திருச்சிக்கு வேன் மூலம் கொண்டு வரப்பட்டது. உடலை117வது பட்டாலியனின் தலைவர் கலோனல் மேதப்பா பெற்றுக் கொண்டார். 117வது பட்டாலியன் மைதானத்தில் அவரது உடலுக்குராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் டாக்டர் மணிவாசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் அவரது உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு பிராட்டியூரில் உள்ள கிருஸ்துவ ஆலயத்தில் 21 குண்டுகள் முழங்க முழுராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சகாயத்திற்கு இன்னும் திருமணமாகவில்லை. மிக இளம் வயதில் நாட்டுக்காக தனதுஇன்னுயிரை தியாகம் செய்துள்ளார் சகாய செல்வராஜ்.


