For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

வரும் ஜூலை 1ம் தேதி முதல் சென்னை- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை- திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகியரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் கூட்டப்படுவதால் பயண நேரம் கணிசமாகக் குறையும். சென்னை- நெல்லைக்கு இடையிலானபயண நேரம் 1 மணி நேரம் வரை இனி குறையும்.

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகளிடையே குறைந்த அளவே வரவேற்பு உள்ள போதிலும், அதை தொடர்ந்து இயக்கமுயற்சித்து வருகிறோம்.

2002-2003ம் ஆண்டில் தென்னக ரயில்வேயில் மிகக் குறைந்த அளவு விபத்துக்களே நடந்தன. கடந்த ஆண்டில் 35 விபத்துக்கள் நடந்தன.அவை இம்முறை 25 ஆகக் குறைந்தன. இதில் 7 விபத்துக்கள் லெவல் கிராசிங்குகளில் நடந்தன. அதிலும் கூட யாரும் உயிரிழக்கவில்லை.

ஈரோடு- கரூர்- திருச்சி இடையே இந்த ஆண்டே புதிய ரயில் இயக்கப்படும். தஞ்சாவூர்- கும்பகோணம் இடையிலான அகல ரயில் பாதைப்பணி மகாமக விழாவுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டுவிடும். அதே போல ராஜபாளையம்- தென்காசி இடையிலான அகலப் பாதைபணியும் மிக வேமகமாக நடந்து வருகிறது என்றார் ஆனந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X