ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு பிரிட்டன் முழு ஆதரவு
லண்டன்:
ஐ.நா. சபையின் பாதுகாப்புக் கவுன்சில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்க பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதில் தன்னையும் நிரந்தர நாடாக சேர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் பல நாடுகளின்ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. ரஷ்யாவும் இதை ஆதரிக்கிறது.
ஆனால், மிக முக்கியமான ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதுவரை இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் இருந்து வந்தன.
இந் நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நல்லுறவுக்கு வழி கோலவும் முயற்சிகள்எடுத்துள்ள நிலையில் இந்தியாவையும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர நாடாக்கலாம் என பிரிட்டன் கருத்துத் தெரிவித்துள்ளது.
இதனை பிரிட்டிஷ் வெளியுறவுத்துறையினர் இந்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவரும் இந்திய- பிரிட்டன் ரவுண்ட்டேபிள் இணைத்தலைவருமான கே.சி.பந்திடம் தெரிவித்தது.
இந்த ரவுண்ட்டேபிள் அமைப்பின் கூட்டம் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பந்த் நிருபர்களிடம் பேசுகையில்,இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர இடம் தர வேண்டும் என்று வற்புறுத்தப் போவதாக பிரிட்டன் கூறியுள்ளது.இந்தியாவுடன் சேர்த்து ஜெர்மனி மற்றும் ஜப்பானையும் நிரந்தர உறுப்பு நாடுகளாக்கலாம் என பிரிட்டன் கருதுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications