சோனியாவுடன் சிதம்பரம் சந்திப்பு: மீண்டும் காங்கிரசில் இணைகிறார்
டெல்லி:
காங்கிரஸ் கட்சியில் பிரிந்து தனிக் கட்சி நடத்தி வரும் ப.சிதம்பரத்தை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரெனடெல்லிக்கு அழைத்துப் பேசினார். அவர் மீண்டும் காங்கிரசுக்குள் இழுக்கப்பட்டு முக்கியப் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.
ராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமாக இருந்த ப.சிதம்பரம், நரசிம்மராவ்- ஜெயலலிதா கூட்டணிக்கு எதிராக பொங்கி எழுந்த ஜி.கே.மூப்பனார் தனிக் கட்சி தொடங்க துணையாக நின்றார். சிதம்பரம் தான் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரைத் தேர்வு செய்தார். அதைதேர்தல் கமிஷனில் பதிவு செய்தது கூட சிதம்பரம் தான்.
ஆனால், பின்னர் மூப்பனாரே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கட்சியை விட்டு விலகி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்றஅமைப்பை உருவாக்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து 2 இடங்களில் வென்றார். இப்போது தமிழக அரசியலில் ப.சி. மெதுவாகக்காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்.
இந் நிலையில் சமீபத்தில் தமிழக காங்கிரஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்ட கமல் நாத் சென்னை வந்து கட்சி நிர்வாகிகளைச்சந்தித்துவிட்டுத் திரும்பினார். ஏகப்பட்ட கோஷ்டிகளைக் கண்டு திணறிய கமல் நாத், டெல்லி திரும்பியதும் சோனியாவைச் சந்தித்தார்.தமிழக காங்கிரஸ் கட்சியை ப.சிதம்பரத்திடம் ஒப்படைத்தால் மட்டுமே அதை கொஞ்சமாவது உயிர்பிக்க முடியும் என கருத்துத்தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து சிதம்பரத்தை சோனியா காந்தி அழைத்துப் பேசியுள்ளார். இது ஜி.கே. வாசன் கோஷ்டிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரத்தை கட்சிக்குள் இழுக்க இளங்கோவன் ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
காங்கிரசுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சோனியா குடும்பத்துக்கு மிகுந்த விசுவாசத்துடன் தான் சிதம்பரம் இருந்து வருகிறார்.சோனியா காந்தி தலைமை வகிக்கும் பல கோடி சொத்துக்கள் கொண்ட ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியாக சிதம்பரம்தொடர்ந்து இருந்து வருகிறார்.
மேலும் கமல் நாத்தை தமிழக பொறுப்பாளராக சோனியா நியமித்ததே சிதம்பரத்தை மீண்டும் உள்ளே இழுக்கத் தான் என்கிறார்கள்.இந்தியா காந்தி காலத்தில் இருந்தே கமல் நாத்தும், சிதம்பரமும் நல்ல நண்பர்கள். ராஜிவ் காந்தியின் இளம் அமைச்சரவையிலும் இந்தஇருவருக்கும் இணை அமைச்சர்கள் பதவி தரப்பட்டது. ஆனாலும் கேபினட் அமைச்சர்களை விட இவர்களுக்கு ராஜிவ் மிகநெருக்கமானவராக இருந்தார். ராஜிவ் காந்தியின் நெருக்கமான வட்டாரத்தில் இருந்த இருவருமே நெருக்கமான நண்பர்கள்.
இதனால், கமல் நாத்தை நியமித்ததே சிதம்பரத்துக்குத் தரப்பட்ட சிக்னல் தான் என்று தெரிகிறது.
மேலும் கருணாநிதியுடன் சிதம்பரத்துக்கு உள்ள நெருக்கம் அடுத்த தேர்தலில், குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ்கூட்டணிக்கு எளிதாக வழி வகுக்கும் என்றும் சோனியா கருதுகிறார்.
விரைவில் சிதம்பரத்துக்கு முக்குய பதவி தரப்பட்டு காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்கப்படலாம். சோனியாவுடனான சந்திப்புக்குப் பின்சிதம்பரம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து திரும்பியவுடன் முக்கிய மாற்றங்கள் நடக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications