மருத்துவ மாணவர்களுக்கு 15ம் தேதி வரை அரசு கெடு
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வரும் 15ம் தேதிக்குள் ஸ்டிரைக்கை கைவிட்டு விட்டு வகுப்புகளுக்கு திரும்பாவிட்டால், ஜூன்மாதம் தொடங்கும் செமஸ்டர் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 18 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுஅவர்களுக்கு ஆதரவாக அரசு டாக்டர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நேற்று முதல் அறுவைச் சிகிச்சை புறக்கணிப்புப் போராட்டமும் தொடங்கியுள்ளது. அடுத்து ஊசி போடுவதைப் புறக்கணிக்கவும்,ஒருநாள் அடையாள வேலைநறுத்தம் மேற்கொள்ளவும், 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளவும்டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
புதிய டாக்டர்கள் நியமனம் தொடங்கியது:
இதற்கிடையே, சில மாவட்டங்களில் புதிதாக அரசு டாக்டர்களை பணியில் நியமிக்கும் பணி தொடங்கி விட்டதாகக்கூறப்படுகிறது. அரசு டாக்டர்கள் பணிக்கு வராவிட்டால் புதிய டாக்டர்களை நியமித்துக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 15ம் தேதிக்குள் வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி திரும்பாத மாணவர்களுக்கு, ஜூன் மாதம் தொடங்கும் தேர்வுகளுக்குரியஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications