3வது முறையாக இன்று மீண்டும் அஸ்ட்ரா சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலாசூர்:
விமானத்தில் இருந்து விமானத்தைத் தாக்கும் அஸ்ட்ரா ஏவுகணை இன்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாகசோதனையிடப்பட்டது.
கடந்த 9ம் தேதியும் நேற்றும் (11ம் தேதி) இந்த ஏவுகணை ஒரிஸ்ஸாவின் சந்திபூர் ஏவுகணைத் தளத்தில் இருந்து ஏவப்பட்டுவெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந் நிலையில் இன்று காலை 10.50 மீண்டும் ஒரு ஏவுகணை ஏவப்பட்டது.
3.8 மீட்டர் நீளமும் 10 இன்ச் சுற்றளவும் கொண்ட இந்த ஏவுகணை இந்தியா தயாரித்துள்ள லைட் காம்பேட் ஏர்கிராப்ட் (எல்.சி.ஏ.)போர் விமானத்துக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
25 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை எதிரி விமானத்தையும் ஹெலிகாப்டரையும் விரட்டிச் சென்று தாக்கும் திறன் கொண்டது இந்தஏவுகணை.












Click it and Unblock the Notifications