அடுத்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் பேச்சு?
லாகூர்:
இந்தியாவுடனான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் துவங்கலாம் என பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் ரஷீத் அஹமத்தெரிவித்தார்.
பாகிஸ்தானுடனான பேச்சு நடத்துவதற்கான திட்டத்தை இந்தியா தயாரித்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா கூறினார்.
ரஷீத் அகமத் கூறுகையில், முதலில் அதிகாரிகள் அளவிலும் பின்னர் தலைவர்கள் அளவிலும் பேச்சு நடக்கும்.பேச்சுவார்த்தைக்காக பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் வரலாம் அல்லது பிரதமர் மிர் ஜமாலி டெல்லி செல்லலாம். இதை ஒருபிரச்சனையாக்க பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எது வசதியோ அதைச் செய்யத் தயார் என்றார்.
டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா பேசுகையில்,
முதலில் அதிகாரிகள் மட்டத்தில் தான் பேச்சு. பேச்சுவார்த்தைக்கான முழுத் திட்டமும் தயார். எல்லை தாண்டிய பயங்கரவாதம்நின்றால் தான் பேச்சுவார்த்தைகள் அர்த்தம் பெறும். காஷ்மீரை மட்டும் பேச முடியாது. தீவிரவாதத்தையும் சேர்த்துத் தான்பாகிஸ்தானுடன் பேச முடியும் என்றார்.
எல்லையில் சண்டை:
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் திடீரென இந்தியப் படைகளை நோக்கி கனரக துப்பாக்கிகளால்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இந்தியப் படைகளும் திருப்பித் தாக்கி வருகின்றன.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையே பாகிஸ்தான் ராணுவம் முற்றிலும் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் கடந்த ஒருவாரமாகவே இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு பெறுமளவில் குறைந்துவிட்டதாகவும் நேற்று தான்மீண்டும் இந்தச் சண்டை தொடங்கியதாகவும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications