அடுத்த மாதம் வாஜ்பாய் சீனா பயணம்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் சீனா செல்கிறார். இதனை பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று அறிவித்தார்.
சமீபத்தில் தான் பெர்னாண்டஸ் சீனா சென்று திரும்பினார். இந்தியா மீது சீனா போர் தொடுத்ததையடுத்து அந் நாட்டுடனான உறவுசீர்குலைந்தது. ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது தான் ஓரளவுக்கு நிலைமை சரியானது.
அவர் சீனா சென்று வந்தார். இதையடுத்து நரசிம்மராவ் ஆட்சியில் இந்திய- சீன உறவு புதிய அத்தியாயத்தைத் தொட்டது. சீனாவுடனானஉறவை சீராக்கிய ராவ், 1993ம் ஆண்டில் பெய்ஜிங் போய் வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வாஜ்பாய் சீனாசெல்ல உள்ளார்.
இந்தியா- சீனா இடையே 9,000 கி.மீ. தூர எல்லை உள்ளது. இதில் பல பகுதிகள் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு சீனாமறைமுகமாக அணு, ஏவுகணைத் தொழில்நுட்பத்தைத் தந்து வந்தாலும் இப்போது இந்தியா- சீனா இடையிலான உறவில் எந்தப் பதற்றமும்இல்லை.
டெல்லியில் ராணுவ தளவாட ஆலைகளின் பொது மேலாளர்கள் கூட்டத்தில் பேசிய பெர்னாண்டஸ் கூறியதாவது: இந்தியாவுடன்நல்லுறவை சீனா விரும்புகிறது. இதை என்னிடம் அந் நாட்டுத் தலைவர்கள் தெளிவாகக் கூறிவிட்டனர். இதையடுத்து வாஜ்பாய் அங்குசெல்ல முடிவு செய்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் இரு தரப்பிலும் எல்லையில் ஒரு துப்பாக்கி கூட சுடப்படவில்லை. இந்தியாவும் சீனாவும் இணைந்து பொருளாதாரவளர்ச்சியில் புதிய உச்சியைத் தொட முடியும் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications