17ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவு: எஸ்.எஸ்.எல்.சி.- 31ம் தேதி
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.அதே போல் 31ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கின. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள்இந்தத் தேர்வுகளை எழுதினர்.
தேர்வுகள் முடிந்த மார்ச் 25ம் தேதியே விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளும் தொடங்கி விட்டன. தமிழகம்முழுவதும் 40 மையங்களில் நடைபெற்ற இந்தப் பணிகள் கடந்த மாத இறுதியிலேயே முடிவடைந்தன.
இதையடுத்து மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக முழுவேகத்தில் நடைபெற்றன. தற்போது அந்தப் பணிகளும் முடிவடைந்து விட்டன. கடைசிக் கட்டமாக விடுபட்டஎண்களைச் சரிபார்க்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வுகள் எழுதியமையங்களுக்குச் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று பகல் 12 மணிக்கு மேல் இன்டர்நெட்டிலும்பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
கடந்த ஆண்டும் மே 17ம் தேதிதான் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் ஒவ்வொரு ஆண்டிலும் மே 17ம் தேதியே முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றும் தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
31ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி.?
அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வரும் 31ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
விடைத் தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எப்படியும் 31ம் தேதி தேர்வு முடிவுகள்வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications