சவுதியில் அல்-கொய்தா பயங்கர தாக்குதல்: பலர் சாவு- 50 பேர் படுகாயம்
ரியாத்:
சவுதி அரேபியத் தலைநகர் ரியாதில் நள்ளிரவில் 4 இடங்களில் தொடர் கார் குண்டுகள் வெடித்தன.
இதில் குறைந்தபட்சம் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த பலரதுநிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
இதில் ஒரு குண்டு அமெரிக்கத் தூதரகத்தின் அருகிலும் மற்ற 3 கார் குண்டுகளும் பெரும்பாலும் அமெரிக்கர்கள் வசிக்கும் பகுதிகளிலும்வெடித்தன.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் சவுதி அரேபியா வரவுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.
சமீபத்தில் ரியாதில் ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா முகாமைக் கண்டுபிடித்துள்ளதாக சவுதி அரேபியப் போலீசார்அறிவித்திருந்தனர். இந் நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
கிழக்கு ரியாதில் கிரனடா என்ற அல்-ஹமாரா என்ற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மீது ஒரு செவர்லெட் கார் மோதியது. மோதும் முன்அதை ஓட்டி வந்த நபர் வாயில் காவலாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து காரை கட்டிடடத்தின் மீது மோதினார். இதில்அந்தக் கட்டடம் உடைந்து நொறுங்கியது.
இதில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரும், சவுதி, லெபனான் நாடுகளைச் சேர்ந்த இருவரும் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பில்அருகில் இருந்த கட்டிடங்களும் அதிர்ந்தன. கண்ணாடிகள் ஜன்னல்கள் உடைந்து சிதறின.
ஜபாலியில் என்ற இடத்தில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் ராணுவ முகாமின் அருகிலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இது அமெரிக்க- சவுதிகூட்டு ராணுவ முகாமாகும்.
மற்றொரு கார் குண்டு வெடிப்பில் ரியாத் விமான நிலைய சாலையில் உள்ள இரு மாளிகைகளும், ஒரு ஹோட்டலும், ஒரு விடுதியும்உடைந்து தரைமட்டமாயின.
இன்னொர் கார் குண்டு அமெரிக்கத் தூதரகம் அருகே வெடித்தது.
காயமடைந்தவர்கள் சவுதி நேசனல் கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் இதுவரைஅனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களில் பலரும் பெண்கள் என்று தெரிகிறது.
ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா ஆதரவு தந்தது. போரின்போது சவுதியின் விமான தளங்களையும் ராணுவதளங்களையும் அமெரிக்கப் படைகள் பயன்படுத்தின. முதல் வளைகுடா போரில் இருந்தே ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள்சவுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் படைகளுக்கு உள்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந் நிலையில் பாலஸ்தீன விவகாரம் குறித்து விவாதிக்க சவுதிமன்னருடன் பேச்சு நடத்த காலின் பாவல் இன்று சவுதி வருகிறார்.
குண்டு வெடிப்புகள் நடந்தாலும் கூட திட்டமிட்டபடி பாவல் சவுதி செல்வார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வீடுகளைவிட்டு அமெரிக்கர்கள் வெளியே வர வேண்டாம் என்றும், சவுதியில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications